Skip to content


ஒருவரின் உதவியோடு பைபிளைப் படிக்கும் திட்டம்

இன்றும் என்றும் சந்தோஷம்!

இந்த இலவச பைபிள் படிப்புத் திட்டத்தில் இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வீர்கள்:

  • சந்தோஷமாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்?

  • நம் பிரச்சினைகள் என்றைக்காவது தீருமா?

  • இறந்துபோன என் அன்பானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா?

  • கடவுளுக்கு என்மேல் அக்கறை இருக்கிறதா?

  • நான் எப்படி ஜெபம் செய்தால் கடவுள் கேட்பார்?

இலவசம்

இந்த முழு படிப்புத் திட்டமும் இலவசம்தான். அதோடு, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற பாட புத்தகத்தையும், தேவைப்பட்டால் பைபிளையும்கூட நீங்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வசதி

உங்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுப்பவர் உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் உங்களை நேரிலோ ஆன்லைனிலோ தொடர்புகொள்வார்.

நிபந்தனைகள் இல்லை

எப்போது வேண்டுமானாலும் நீங்கள் படிப்பை நிறுத்திவிடலாம், எல்லாமே உங்கள் விருப்பம்தான்.

பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படும்?

பைபிளில் இருக்கும் விஷயங்களை ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார். ஒவ்வொரு தலைப்பாக அவர் உங்களோடு கலந்துபேசுவார். இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற பாட புத்தகத்தைப் படிப்பதன் மூலம் பைபிள் சொல்லும் விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்வீர்கள். அந்த விஷயங்கள் உங்களுக்கு எப்படி உதவும் என்றும் தெரிந்துகொள்வீர்கள். கூடுதல் விவரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள் அல்லது இந்தப் படிப்புத் திட்டத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களைப் பாருங்கள்.

பாட புத்தகத்தைப் பார்க்க வேண்டுமா?

ஆரம்பப் பாடங்களைப் பாருங்கள்.

ஆரம்பிக்கலாமா?

பைபிள் படிப்பை ஆரம்பிக்க இந்த பட்டனை க்ளிக் செய்யுங்கள்.