ஏசாயா 58:1-14

58  அவர் என்னிடம், “என் ஜனங்கள் செய்திருக்கிற குற்றங்களையும்,+ யாக்கோபின் வம்சத்தார் செய்திருக்கிற பாவங்களையும், அவர்கள் எல்லாரும் கேட்கும்படி குரலை உயர்த்தி சொல்; கொஞ்சமும் தயங்காதே.ஊதுகொம்பைப் போலச் சத்தமாக முழங்கு.   ஏதோ என்னுடைய நீதியை எப்போதும் கடைப்பிடிக்கிறவர்களைப் போலவும்,நியாயமாக நடக்கிறவர்களைப் போலவும்,+அவர்கள் தினமும் என் உதவியைத் தேடுகிறார்கள்.என் வழிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாகச் சொல்கிறார்கள். என்னிடம் நீதியான தீர்ப்புகளைக் கேட்கிறார்கள்.என்னிடம் நெருங்கி வர விரும்புவதாகச் சொல்கிறார்கள்.+   ‘நாங்கள் விரதம் இருக்கும்போது நீங்கள் ஏன் பார்ப்பது இல்லை?+ எங்களை வருத்திக்கொள்ளும்போது* ஏன் கவனிப்பது இல்லை?’+ என்று என்னிடம் கேட்கிறார்கள். நீங்கள் விரத நாளில் உங்களுடைய சொந்த வேலைகளைச் செய்கிறீர்களே!உங்களிடம் வேலை பார்க்கிறவர்களை அடக்கி ஒடுக்குகிறீர்களே!+   அதுமட்டுமல்ல, உங்களுடைய விரதமெல்லாம் சண்டை சச்சரவில்தான் முடிகிறது.நீங்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்குகிறீர்கள். இப்படி விரதமிருந்தால் உங்கள் குரலை நான் கேட்க மாட்டேன்.   உங்களையே வருத்திக்கொண்டு,நாணற்புல்லைப் போலத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு,துக்கத் துணியிலும்* சாம்பலிலும் படுத்துக்கொண்டுவிரதம் இருக்க வேண்டும் என்றா நான் சொன்னேன்? இதையா யெகோவாவுக்குப் பிரியமான விரத நாள் என்று சொல்கிறீர்கள்?   நீங்கள் உண்மையில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்: அக்கிரமத்தின் விலங்குகளை நீங்கள் கழற்றிப்போட வேண்டும்.நுகத்தடியின் கயிறுகளை அவிழ்த்துப்போட வேண்டும்.+எல்லா நுகத்தடிகளையும் இரண்டாக உடைத்தெறிய வேண்டும்.எல்லா அடிமைகளையும் விடுதலை செய்ய வேண்டும்.+   பசியில் வாடுகிறவர்களோடு உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.+ஏழைகளுக்கும் வீடுவாசல் இல்லாதவர்களுக்கும் உங்கள் வீட்டில் இடம் தர வேண்டும்.வெற்று உடம்போடு இருக்கிறவர்களைப் பார்க்கும்போது உடை தர வேண்டும்.+உங்கள் சகோதரர்களுக்குத் தேவையான உதவி செய்ய வேண்டும்.   அப்போது, உங்கள் வெளிச்சம் விடியற்கால வெளிச்சம் போல இருக்கும்.+நீங்கள் சீக்கிரத்தில் குணமாவீர்கள். உங்கள் நீதி உங்களுக்கு முன்னால் போகும்.யெகோவாவின் மகிமை உங்களுக்குப் பின்னால் வந்து உங்களைக் காக்கும்.+   நீங்கள் கூப்பிடுவீர்கள், யெகோவா பதில் சொல்வார்.நீங்கள் உதவி கேட்டுக் கதறுவீர்கள்; ‘இதோ நான் இருக்கிறேன்!’ என்று அவர் சொல்வார். எல்லா நுகத்தடிகளையும் நீங்கள் உடைத்தெறிந்துவிட்டு,மற்றவர்களைப் பார்த்து விரலை நீட்டுவதையும் பழித்துப் பேசுவதையும் விட்டுவிட்டு,+ 10  நீங்கள் விரும்பிச் சாப்பிடுவதைப் பசியாய் இருக்கிறவர்களுக்குக் கொடுத்து,+கஷ்டப்படுகிறவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தால்,இருட்டிலும் வெளிச்சம் போல இருப்பீர்கள்,நடுப்பகல் போலப் பிரகாசிப்பீர்கள்.+ 11  யெகோவா எப்போதும் உங்களை வழிநடத்துவார்.வறண்ட தேசத்தில்கூட உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.+உங்களுக்குப் புத்துயிர் தருவார்.நீங்கள் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போலவும்,+வற்றாத நீரூற்று போலவும் ஆவீர்கள். 12  இடிந்து கிடக்கிறவற்றை உங்களுக்காகத் திரும்பக் கட்டுவீர்கள்.+தலைமுறை தலைமுறையாகப் பாழாய்க் கிடக்கும் அஸ்திவாரங்களை மறுபடியும் எழுப்புவீர்கள்.+ நீங்கள் உடைந்த மதில்களைப் பழுதுபார்க்கிறவர்கள் என்றும்,+குடியிருக்கும்படி சாலைகளைச் சீரமைக்கிறவர்கள் என்றும் அழைக்கப்படுவீர்கள். 13  என்னுடைய பரிசுத்த நாளான ஓய்வுநாளில் உங்கள் சொந்த வேலைகளைச் செய்யாமல் இருந்தால்,+அதை ஒரு முக்கியமான நாளாகவும், யெகோவாவின் பரிசுத்த நாளாகவும், மிகுந்த சந்தோஷம் தருகிற நாளாகவும் நினைத்தால்,+ உங்கள் சொந்த வேலைகளைச் செய்யாமலும் வீண் வார்த்தைகளைப் பேசாமலும் அந்த நாளை மகிமைப்படுத்தினால், 14  யெகோவாவாகிய என்னை வணங்குவதில்* மிகுந்த சந்தோஷத்தைப் பெறுவீர்கள்.நீங்கள் மலைகளையும் குன்றுகளையும் கைப்பற்றும்படி நான் செய்வேன்.+ உங்கள் மூதாதையான யாக்கோபுக்குக் கொடுத்த தேசத்தை நீங்கள் அனுபவிக்கும்படி செய்வேன்.+யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்” என்றார்.

அடிக்குறிப்புகள்

விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.
வே.வா., “யெகோவாவாகிய என்னில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா