நீதிமொழிகள் 2:1-22

2  என் மகனே, என்னுடைய ஆலோசனைகளை நீ ஏற்றுக்கொண்டால்,என்னுடைய கட்டளைகளைப் பொக்கிஷம்போல் பாதுகாத்தால்,+   ஞானத்தைக் காதுகொடுத்துக் கேட்டால்,+பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள+ உன் இதயத்தைத் திறந்தால்,   புத்தியை* சத்தமாகக் கூப்பிட்டால்,+பகுத்தறிவை உரத்த குரலில் அழைத்தால்,+   வெள்ளியைத் தேடுவதுபோல் அவற்றை விடாமல் தேடினால்,+புதையல்களைத் தேடுவதுபோல் தொடர்ந்து தேடினால்,+   அப்போது, யெகோவாவுக்குப் பயப்படுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வாய்,+கடவுளைப் பற்றிய அறிவைக் கண்டடைவாய்.+   ஏனென்றால், யெகோவாவே ஞானத்தைக் கொடுக்கிறார்.+அவருடைய வாய் அறிவையும் பகுத்தறிவையும் பொழிகிறது.   நேர்மையானவர்களுக்காக ஞானத்தை* அவர் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறார்.உத்தமமாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயம்போல் இருக்கிறார்.+   அவர் நியாயத்தின் பாதைகளைக் காக்கிறார்.தனக்கு உண்மையாக* இருப்பவர்களின் வழியைப் பாதுகாப்பார்.+   இவற்றை நீ செய்தால் நீதி, நியாயம், நேர்மை என்னவென்று புரிந்துகொள்வாய்,நல்ல வழிகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாய்.+ 10  ஞானம் உன் இதயத்தில் குடிபுகுந்து,+அறிவு உன் ஜீவனுக்குச் சந்தோஷம் தரும்போது,+ 11  யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும்,+பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும். 12  அதனால், நீ தவறான பாதையிலிருந்தும்,தாறுமாறாகப் பேசுகிறவனிடமிருந்தும்,+ 13  இருண்ட பாதைகளில் போவதற்காகநேர்வழியைவிட்டு விலகுகிற ஆட்களிடமிருந்தும்,+ 14  குற்றம் செய்வதில் சந்தோஷப்படுகிற ஆட்களிடமிருந்தும்,படுமோசமான காரியங்களில் மகிழ்ச்சியடைகிற ஆட்களிடமிருந்தும் பாதுகாக்கப்படுவாய். 15  அவர்களுடைய பாதைகள் கோணலானவை.அவர்களுடைய வழிகள் எல்லாமே போலியானவை. 16  நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும்.இனிக்க இனிக்கப் பேசுகிற ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்து அது உன்னைக் காப்பாற்றும்.+ 17  அப்படிப்பட்ட பெண், இளமையில் கைப்பிடித்த கணவனை விட்டுவிடுகிறாள்.+கடவுளோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிடுகிறாள். 18  அவள் வீடு சவக்குழிக்குள் இறங்குகிறது.அவள் பாதைகள் கல்லறைக்கு* போகின்றன.+ 19  அவளோடு உறவுகொள்கிற யாரும் உயிரோடு திரும்பி வருவதில்லை.அவர்கள் யாரும் வாழ்வின் பாதைக்குத் திரும்புவதில்லை.+ 20  அதனால், நல்லவர்களின் வழியில் நட.நீதிமான்களின் பாதையைவிட்டு விலகாமல் இரு.+ 21  நேர்மையானவர்கள் மட்டும்தான் இந்தப் பூமியில் குடியிருப்பார்கள்.குற்றமற்றவர்கள்* மட்டும்தான் அதில் தங்கியிருப்பார்கள்.+ 22  ஆனால், பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.+துரோகிகள் இந்த உலகத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”
அதாவது, “நடைமுறை ஞானத்தை.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களிடம்.”
வே.வா., “உத்தமமாக நடக்கிறவர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா