Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 155

எங்கள் சந்தோஷம் நீரே

எங்கள் சந்தோஷம் நீரே

(சங்கீதம் 16:11)

  1. 1. விண்மீன்கள் என்னும் வைரங்கள்

    வான் எங்கும் மின்னும்!

    இவ்வானம், காற்று, நீர், நிலம்

    உம் அன்பைச் சொல்லும்!

    கண் காணும் யாவும் அற்புதம்,

    உம் கை வரைந்த சித்திரம்,

    சந்தோஷத்தோடே!

    (பல்லவி)

    இன்று வாழும் காலம் யாவும்,

    புது பூமி காணும் போதும்,

    தருவீர் சந்தோஷமே!

    இருந்தாலும், நெஞ்சம் ஏங்கும்,

    உமதன்பே என்றும் வேண்டும்,

    அதுபோதும் தேவனே!

    எம் சந்தோஷம் நீரே!

  2. 2. எம் வாழ்வின் தேவை ஒவ்வொன்றும்

    உம் கையில் பெற்றோம்!

    நீர் தந்ததெல்லாம் தந்தையே

    சந்தோஷம் சேர்க்கும்!

    நீர் தந்த எங்கள் ஜீவனும்,

    என்றென்றும் வாழும் எண்ணமும்,

    சந்தோஷம்தானே!

    (பல்லவி)

    இன்று வாழும் காலம் யாவும்,

    புது பூமி காணும் போதும்,

    தருவீர் சந்தோஷமே!

    இருந்தாலும், நெஞ்சம் ஏங்கும்,

    உமதன்பே என்றும் வேண்டும்,

    அதுபோதும் தேவனே!

    எம் சந்தோஷம் நீரே!

    (பிரிட்ஜ்)

    மெய்யானது எம் வாழ்விலே

    சந்தோஷம்தானே!

    உம் மைந்தனை எம் மீட்பராய்

    யெகோவா நீர் தந்ததாலே!

    (பல்லவி)

    இன்று வாழும் காலம் யாவும்,

    புது பூமி காணும் போதும்,

    தருவீர் சந்தோஷமே!

    இருந்தாலும், நெஞ்சம் ஏங்கும்,

    உமதன்பே என்றும் வேண்டும்,

    அதுபோதும் தேவனே!

    எம் சந்தோஷம் நீரே!

    (பல்லவி)

    இன்று வாழும் காலம் யாவும்,

    புது பூமி காணும் போதும்,

    தருவீர் சந்தோஷமே!

    இருந்தாலும், நெஞ்சம் ஏங்கும்,

    உமதன்பே என்றும் வேண்டும்,

    அதுபோதும் தேவனே!

    எம் சந்தோஷம் நீரே!

(பாருங்கள்: சங். 37:4; 1 கொ. 15:28.)