Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 92

உம் பெயர் தாங்கும் இடம்

உம் பெயர் தாங்கும் இடம்

(1 நாளாகமம் 29:16)

  1. 1. காய்ந்-த நி-லத்-தில் ம-ழை போ-ல,

    நெஞ்-சின் ஏக்-கம் தீர்ந்-த-தின்-றே.

    உம் பேர் பு-கழ் பே-சி-டும் மன்-றம்,

    பா-ரும் இ-தோ பூத்-த-திங்-கே.

    ஏ-தும் எ-ம-து சொந்-த-மில்-லை

    யா-வும் உம் கை-யில் பெற்-றோ-மே.

    எம் நே-ரம், தி-றன், வ-ளம் எல்-லாம்

    நெஞ்-சா-ர தந்-தோம் உ-மக்-கே.

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, உம் பே-ரை-யே,

    தாங்-கும் மன்-றம் தந்-தீ-ரே.

    அர்ப்-ப-ணம் செய்-கி-றோம் இன்-றே,

    ஏற்-றுக்-கொள்-ளும் தே-வ-னே.

  2. 2. வா-டும் உ-யிர்-கள் உம்-மைத் தே-டி

    தஞ்-சம் அ-டை-யும் இ-ட-மே.

    நா-ளும் உ-ம-து பு-கழ் பா-டி

    கூ-டும் இ-ட-மும் இ-து-வே.

    சாட்-சி சொல்-லும் வே-லைக்-கு இங்-கே

    சாட்-சி இந்-த மன்-றம்-தா-னே.

    கண்-ணை இ-மை காப்-ப-து போ-லே

    காப்-போம் இந்-த மன்-றத்-தை-யே.

    (பல்லவி)

    யெ-கோ-வா-வே, உம் பே-ரை-யே,

    தாங்-கும் மன்-றம் தந்-தீ-ரே.

    அர்ப்-ப-ணம் செய்-கி-றோம் இன்-றே,

    ஏற்-றுக்-கொள்-ளும் தே-வ-னே.