Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Anna Moneymaker/Getty Images

விழிப்புடன் இருங்கள்!

உலக அழிவு நாள் கடிகாரம்... 12 மணியை நெருங்குகிறது முள்... பைபிள் என்ன சொல்கிறது?

உலக அழிவு நாள் கடிகாரம்... 12 மணியை நெருங்குகிறது முள்... பைபிள் என்ன சொல்கிறது?

 ஜனவரி 24, 2023 அன்று, உலக அழிவு நாள் கடிகாரத்தின் (டூம்ஸ் டே கடிகாரத்தின்) a முள்ளை நள்ளிரவுக்கு பக்கத்தில் விஞ்ஞானிகள் நகர்த்தியிருக்கிறார்கள். உலக அழிவு எட்டிப்பார்க்கும் தூரத்தில்தான் இருக்கிறது என்பதை இது குறிக்கிறது.

  •    ”மனிதகுலத்தின் அழிவுக்கு அடையாளமாக இருக்கும் ‘டூம்ஸ் டே கடிகாரத்தின்’ முள் செவ்வாய்க்கிழமை அன்று, நள்ளிரவுக்கு மிக அருகில் நகர்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் போர், அணுஆயுத நெருக்கடி மற்றும் பருவ நிலை மாற்றத்தால் இப்படி செய்யப்பட்டிருக்கிறது.“—AFP இன்டர்நெஷ்னல் டெக்ஸ்ட் வையர்.

  •    ”‘டூம்ஸ் டே கடிகாரத்தின்’ முள் செவ்வாய்க்கிழமை அன்று நகர்த்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணிக்கு இன்னும் 90 வினாடிகளே மீதம் இருக்கிறது. மனிதகுலம் இதுவரை அர்மகெதோனுக்கு இவ்வளவு அருகில் வந்ததே இல்லை!“—ABC நியூஸ்.

  •    ”மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அழிவதற்கான அச்சுறுத்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகமாக இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகளின் குழு எச்சரித்திருக்கிறது.“—தீ கார்டியன்.

 மனிதகுலத்துக்கும் இந்த பூமிக்கும் அழிவு நெருங்கிவிட்டதா? எதிர்காலத்தை நினைத்து பயப்பட வேண்டுமா? பைபிள் என்ன சொல்கிறது?

எதிர்காலம்—எப்படி இருக்கும்?

 ‘பூமி என்றென்றும் நிலைத்திருக்கும்,’ மக்கள் “என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்பதே பைபிளின் கருத்து! (பிரசங்கி 1:4; சங்கீதம் 37:29) அதனால், மனிதர்களால் இந்த பூமியை அழிக்கவோ வாழவே முடியாத ஒரு இடமாக மாற்றவோ முடியாது!

 ஆனால், வேறொரு விதமான முடிவு வரும் என்று பைபிள் சொல்கிறது. ‘இந்த உலகம் . . . ஒழிந்துபோகும்’ என்று அது சொல்கிறது.—1 யோவான் 2:17.

நம்பிக்கையாக இருங்கள்

 உலகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நம்பிக்கையான மனநிலையோடு இருக்க பைபிள் உதவி செய்யும். எப்படி?

  •    நம் வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகளை பைபிள் தருகிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இருக்க பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ள, ”கவலைகளை எப்படி சமாளிப்பது?” என்ற தலைப்பில் வந்த பத்திரிகையை பாருங்கள்.

  •    நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை பைபிள் கொடுக்கிறது. (ரோமர் 15:4) இன்றும் எதிர்காலத்திலும் என்ன நடக்கும் என்று பைபிள் துல்லியமாக காட்டுகிறது. அதனால், உலக நிலைமைகள் எவ்வளவு மோசமானாலும் சரி, அதை நம்மால் தைரியமாக சமாளிக்க முடியும்.

 பைபிளிலிருந்து இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள, எங்களோடு சேர்ந்து பைபிளை இலவசமாக படியுங்கள்.

a ”மனிதர்களுடைய ஆபத்தான கண்டுபிடிப்புகள் உலகத்தை அழிவின் பாதையில் கொண்டு செல்கிறது. உலக அழிவு எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது என்பதை மக்களுக்கு எச்சரிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த டூம்ஸ் டே கடிகாரம். மனிதர்கள் இந்த பூமியில் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால் நம்மை பாதிக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை இது ஞாபகப்படுத்துகிறது.“—புல்லட்டின் ஆஃப் தீ அட்டாமிக் சையன்டிஸ்ட்ஸ்.