Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | மிகச் சிறந்த பரிசு!

“எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு இதுதான்!”

“எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு இதுதான்!”

செல்ல நாய்க்குட்டி ஒன்று தனக்குப் பரிசாகக் கிடைத்தபோது, ஒரு 13 வயது பெண் இப்படித்தான் உணர்ந்தாள். உயர்நிலை பள்ளியில் படித்தபோது தன் அப்பா வாங்கிக்கொடுத்த கம்ப்யூட்டர் தன் வாழ்க்கையையே மாற்றியதாக வெற்றிகரமான பெண் தொழிலதிபர் ஒருவர் சொல்கிறார். முதலாம் ஆண்டு திருமண நாளுக்கு தன் மனைவி தன் கையால் செய்துகொடுத்த க்ரீட்டிங் கார்டுதான் தனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்று புதிதாகத் திருமணமான ஒருவர் சொல்கிறார்.

ஒரு விசேஷ நாளில், தன் நண்பருக்கோ உறவினருக்கோ ஒரு “சிறந்த” பரிசைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருஷமும் நிறைய பேர் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்கிறார்கள். ‘எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு இதுதான்!’ என்று பரிசைப் பெற்றுக்கொள்பவர்கள் சொல்ல வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள். நீங்களும் அப்படித்தான் விரும்புகிறீர்களா? உயர்வாக மதிக்கப்படும் ஒரு பரிசைக் கொடுக்கவோ பெற்றுக்கொள்ளவோ நீங்கள் விரும்புகிறீர்களா?

நிச்சயம் விரும்புவீர்கள்! ஏனென்றால், அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்பவருக்கும் சரி, கொடுப்பவருக்கும் சரி, அது நல்ல உணர்வை ஏற்படுத்தும். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 20:35) கொடுப்பதில் அதிக சந்தோஷம் கிடைக்க வேண்டுமென்றால், மற்றவர்கள் உயர்வாக மதிக்கும் விதத்தில் ஒரு பரிசைக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் கொடுக்கும் பரிசு, உங்களுக்கும் பரிசைப் பெற்றுக்கொள்பவருக்கும் உண்மையான சந்தோஷத்தைத் தர வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்யலாம்? “சிறந்த” பரிசு ஒன்றை உங்களால் கொடுக்க முடியவில்லை என்றாலும், மற்றவர்கள் உயர்வாக மதிக்கும் விதத்தில் நீங்கள் எப்படி ஒரு பரிசைக் கொடுக்கலாம்?