Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாசமுள்ள நம் படைப்பாளருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது

பாசமுள்ள நம் படைப்பாளருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது

1. நம் படைப்பாளர் சூரியனை உதிக்க வைக்கிறார்

சூரியன் இல்லாமல் உயிர்களால் வாழ முடியாது. மரங்களுக்குத் தேவையான சக்தியை சூரியன் தருகிறது. அதனால்தான் இலைகள் துளிர்க்கின்றன, பூக்கள் பூக்கின்றன, காய்கள் காய்க்கின்றன, விதைகள் உருவாகின்றன. அதோடு, வேர் வழியாக நிலத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சி, இலைகள்வரை கொண்டுபோய், பின்பு அது நீராவியாக ஆவதற்கும் சூரியன் உதவுகிறது.

2. நம் படைப்பாளர் மழையைப் பெய்ய வைக்கிறார்

மழை, நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் அருமையான ஒரு பரிசு. மழை பெய்வதால் நாம் சாப்பிடுவதற்குத் தேவையான உணவு இந்தப் பூமியில் விளைகிறது. இறைவன் வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் தருகிறார். இவை நம் மனதுக்கு சந்தோஷத்தைத் தருகின்றன.

3. இறைவன் நமக்கு உணவும் உடையும் கொடுக்கிறார்

நிறைய அப்பாக்கள் தங்களுடைய குடும்பத்துக்குத் தேவையான சாப்பாட்டையும் துணிமணிகளையும் எப்படிக் கொடுப்பது என்று நினைத்து ரொம்பக் கவலைப்படுகிறார்கள். ஆனால், இறைவேதம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். “வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?“—மத்தேயு 6:25, 26.

“காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள் . . . ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த [ராஜா] சாலொமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை . . . காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா?”—மத்தேயு 6:28-30.

நமக்குத் தேவையான உணவையும் உடையையும் இறைவனால் கொடுக்க முடியும் என்றால் நாம் வாழ்வதற்கு தேவையான மற்ற விஷயங்களையும் அவரால் கொடுக்க முடியும். இறைவனுடைய விருப்பத்துக்கு வாழ்க்கையில் நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது, பயிர்களை விளையச் செய்ய நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார். அல்லது, நம்முடைய தேவைகளை கவனித்துக்கொள்வதற்குப் பொருத்தமான ஒரு வேலையைக் கண்டுபிடிக்க உதவி செய்வார்.—மத்தேயு 6:32, 33.

சூரியன், மழை, பறவைகள், பூக்கள் இதையெல்லாம் பார்க்கும்போது இறைவனை நாம் ஏன் நேசிக்க வேண்டும் என்பது நன்றாகப் புரிகிறது. அடுத்தக் கட்டுரையில், மனிதர்களிடம் படைப்பாளர் எப்படிப் பேசியிருக்கிறார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.