Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலக செய்திகள்

அமெரிக்கா-ஒரு பார்வை

அமெரிக்கா-ஒரு பார்வை

பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை இந்த செய்தி அறிக்கைகள் காட்டுகின்றன.

ஈ-மெயில் பார்ப்பதை குறைத்தால், மன அழுத்தம் குறையும்.

ஒரு நாளில் அடிக்கடி ஈ-மெயிலை பார்ப்பதற்கு பதிலாக, இரண்டு அல்லது மூன்று தடவை பார்த்தால் மன அழுத்தம் குறையும் என்று கனடாவில் இருக்கும் வான்கோவர் என்ற நகரத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார்கள். “அடிக்கடி ஈ-மெயிலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது நிறைய பேருக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அதை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால் அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்க முடியும்” என்று அந்த ஆராய்ச்சியை நடத்திய காஸ்ட்டின் குஷ்லெவ் சொல்கிறார்.

சிந்தித்துப் பாருங்கள்: நாம் ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்வதால் மன அழுத்தத்தை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று யோசித்துப்பார்க்க வேண்டும், இல்லையா?—2 தீமோத்தேயு 3:1.

கடல்வளத்தை காப்பாற்ற...

பெலிஸ் மற்றும் சில கரீபியன் பகுதிகளில், “மீன் பிடிக்கக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்ததால் மீன், இறால் போன்ற கடலில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது” என்று வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்துக்கு (WCS) வந்த அறிக்கை சொன்னது. அதோடு, “அரசாங்கம் தடைவிதித்த பகுதிகளில் மீன் பிடிக்காமல் இருந்தால், அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்களை, 1-6 வருஷங்களுக்குள் ஓரளவு காப்பாற்றலாம். முழுமையாக காப்பாற்ற பல பத்தாண்டுகள் எடுக்கலாம்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. WCS அதிகாரி ஜெனெட் கிப்ஸன் இப்படி சொல்கிறார்: “அரசாங்கம் தடைவிதிக்கும் பகுதிகளில் மீன் பிடிக்காமல் இருந்தால் கடல்வளத்தை முழுமையாக காப்பாற்ற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.”

சிந்தித்துப் பாருங்கள்: தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் சக்தியை ஒரு அறிவுள்ள படைப்பாளர் இயற்கைக்கு கொடுத்திருக்க வேண்டும், இல்லையா?—சங்கீதம் 104:24, 25.

பிரேசிலில் வன்முறை.

பிரேசிலில் வன்முறை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது என்று அஷன்ஸியா பிரேசில் என்ற செய்தி நிறுவனம் சொல்கிறது. 2012-ல் மட்டும், 56,000-க்கும் அதிகமான கொலைகள் நடந்திருக்கிறது. இதுதான் ஒரு வருஷத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச கொலைகளின் எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சகம் சொல்கிறது. லூயிஸ் சாப்பொரீ என்ற பாதுகாப்பு அதிகாரியின் கருத்துப்படி, சட்ட ஒழுங்கின்மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் குறைந்ததே இதற்கு காரணம். அதனால், “தாங்கள் விரும்புவதை செய்வதற்கு வன்முறையை கையில் எடுக்கிறார்கள்” என்று அவர் சொல்கிறார்.

யோசித்து பாருங்கள்: கடைசி காலத்தில் நிறைய பேரின் “அன்பு தணிந்துபோகும்” என்றும் அக்கிரமம் அதிகமாகும் என்றும் பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது.—மத்தேயு 24:3, 12. (g16-E No. 5)