Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 18

கடவுளுடைய நண்பராவது எப்படி?

“ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்.”

சங்கீதம் 65:2

“யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே. எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய். அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.”

நீதிமொழிகள் 3:5, 6

“ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.”

யோவான் 17:3

‘உண்மையில், அவர் [கடவுள்] நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை.’

அப்போஸ்தலர் 17:27

“அன்பிலும் திருத்தமான அறிவிலும் முழுமையான பகுத்தறிவிலும் நீங்கள் அதிகமதிகமாகப் பெருக வேண்டும் என்று . . .  தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்.”

பிலிப்பியர் 1:9, 10

“உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் திட்ட மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்.”

யாக்கோபு 1:5

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தமாக்குங்கள்; இரண்டு மனதாக இருக்கிறவர்களே, உங்கள் இதயங்களைத் தூய்மையாக்குங்கள்.”

யாக்கோபு 4:8

“நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”

1 யோவான் 5:3