Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெறுப்பால் வெறுப்பானவர்கள்—உலகெங்கும்!

வெறுப்பால் வெறுப்பானவர்கள்—உலகெங்கும்!

வெறுப்பு என்ற பெருந்தொற்று உலகத்தில் பரவிக்கிடக்கிறது.

வார்த்தைகளாலும் ஈ-மெயில் வழியாகவும் இன்டர்நெட் வழியாகவும் மக்கள் வெறுப்பை கொட்டித் தீர்க்கிறார்கள். வெறுப்பினால் நிறைய குற்றங்களையும் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, மற்றவர்கள்மேல் தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறார்கள், தவறாக முத்திரை குத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், மிரட்டுகிறார்கள், கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களைத்தான் செய்திகளிலும் சோஷியல் மீடியாவிலும் அதிகமாகப் பார்க்கிறோம். திரும்பிய பக்கமெல்லாம் வெறுப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

வெறுப்பு என்ற சங்கிலியை எப்படி உடைப்பது என்பதைப் பற்றி இந்தப் பத்திரிகை பேசும். அப்படிச் செய்வது வெறுமனே வாய்ப்பேச்சு கிடையாது! அது ஏற்கெனவே நடந்துகொண்டு இருக்கிறது. உலகத்தில் நிறைய பேர் வெறுப்பை விட்டுவிட்டு சமாதானமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.