Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் என்ன சொல்கிறது?

இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது?

மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இறந்த பிறகு ஆவியாகவோ மறுஜென்மம் எடுத்தோ உயிர் வாழ்வதாக சிலர் நினைக்கிறார்கள். வேறு சிலர், இறந்துவிட்டால் நம் வாழ்க்கை அதோடு முடிந்துவிட்டது, அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

“மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) சாகும்போது நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • முதல் மனிதன் ஆதாம் இறந்தபோது அவன் மண்ணோடு மண்ணாகிப் போனான். (ஆதியாகமம் 2:7; 3:19) அதேபோல, இறந்துபோகும் எல்லாருமே ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறார்கள்.—பிரசங்கி 3:19, 20.

  • இறந்துபோகிறவர்களின் பாவம் மன்னிக்கப்பட்டிருக்கும். (ரோமர் 6:7) ஒரு மனிதன் இறந்த பிறகு, அவன் செய்த பாவத்துக்கு எந்த தண்டனையும் கிடையாது.

இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா?

நீங்கள் என்ன சொல்வீர்கள்?

  • வருவார்கள்

  • வரமாட்டார்கள்

  • வரலாம்

பைபிள் தரும் பதில்

“உயிர்த்தெழுப்பப்படுவார்கள் [அதாவது, உயிரோடு வருவார்கள்].”—அப்போஸ்தலர் 24:15.

பைபிளில் இருந்து இன்னும் என்ன தெரிந்துகொள்ளலாம்?

  • சாவு என்பது தூக்கத்தைப் போன்றது என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 11:11-14) தூக்கத்தில் இருந்து ஒருவரை நாம் எழுப்புவது போல, இறந்துபோனவர்களை கடவுளால் எழுப்ப முடியும்.—யோபு 14:13-15.

  • இறந்துபோன சிலரை, கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டுவந்ததற்கு பைபிளில் ஆதாரம் இருக்கிறது. அதனால், இறந்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.—1 இராஜாக்கள் 17:17-24; லூக்கா 7:11-17; யோவான் 11:39-44. (w16-E No.1)