Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

இளம் வயசுல எடுத்த தீர்மானத்துக்காக அவர் வருத்தப்பட்டதே இல்ல

இளம் வயசுல எடுத்த தீர்மானத்துக்காக அவர் வருத்தப்பட்டதே இல்ல

என் தாத்தா பேர் நிக்கொலாய் டூபோவின்ஸ்கி. அவர் என் பாட்டியோட கூடப்பிறந்த அண்ணன். வாழ்க்கையில சந்திச்ச சந்தோஷமான, கஷ்டமான அனுபவங்களை எல்லாம் அவர் எழுதி வைச்சிருந்தார். முக்கியமா, சோவியத் யூனியன்ல நம்ம வேலை தடை செய்யப்பட்டிருந்த சமயத்தில அவர் யெகோவாவுக்கு சேவை செஞ்சதை பத்தி எழுதியிருந்தார். எத்தனையோ பிரச்சினைகள் மத்தியிலயும் அவர் யெகோவாவுக்கு உண்மையா இருந்தார். வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிச்சு வாழணுங்கிற ஆசை அவருக்கு எப்பவும் இருந்தது. அவரோட அனுபவத்தை எல்லா இளைஞர்களும் தெரிஞ்சிக்கணும்னு அடிக்கடி சொல்வார். அதனால, அவர் வாழ்க்கையில நடந்த சில முக்கியமான சம்பவங்களை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுறேன். 1926-வது வருஷம், உக்ரைன்ல இருக்கிற ஒரு கிராமத்தில என் தாத்தா பிறந்தார்.

நிக்கொலாய் எப்படி யெகோவாவை பத்தி தெரிஞ்சிக்கிட்டார்?

என் தாத்தா அவர் வாழ்க்கையில நடந்த விஷயங்களை நமக்கு சொல்றார். “1941-ல கடவுளின் சுரமண்டலம், காலங்களின் தெய்வீக திட்டம் என்ற புத்தகங்களையும் சில காவற்கோபுரத்தையும் நிறைய சிறுபுத்தகங்களையும் என் அண்ணன் ஈவான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தார். உலகத்தில நடக்கிற எல்லா பிரச்சினைக்கும் கடவுள் காரணம் இல்ல, பிசாசுதான் காரணம்னு அதெல்லாம் படிச்சதுக்கு அப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன். அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது! அதோடு பைபிள்ல இருக்கிற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் புத்தகங்களையும் படிச்சேன். பைபிள்ல இருக்கிற உண்மைகளை அப்போதான் புரிஞ்சிக்கிட்டேன். கடவுளோட அரசாங்கத்தை பத்தி தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை மத்தவங்ககிட்ட ஆர்வமா சொன்னேன். இந்த புத்தகங்களை எல்லாம் படிக்க படிக்க பைபிள்ல இருந்து நிறைய உண்மைகளை தெரிஞ்சிக்கிட்டேன். அதனால, ஒரு யெகோவாவின் சாட்சியா ஆகணுங்கிற ஆசை எனக்கு வந்தது.”

“பைபிள் சொல்ற மாதிரி வாழ்ந்தா கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு எனக்கு தெரியும். ஏன்னா உலகம் முழுசும் அந்த சமயத்தில போர் நடந்துட்டு இருந்தது. ஆனா போர்ல ஈடுபட கூடாது, யாரையும் கொல்ல கூடாதுனு தீர்மானமா இருந்தேன். எனக்கு வரப்போற சோதனையை சமாளிக்க மத்தேயு 10:28; 26:52 போன்ற பைபிள் வசனங்களை மனப்பாடம் செஞ்சேன். உயிரே போனாலும் யெகோவாவுக்குதான் உண்மையா இருக்கணும்னு தீர்மானமா இருந்தேன்!”

“1944-ல எனக்கு 18 வயசு இருக்கும்போது என்னையும் இன்னும் சில சகோதரர்களையும் ராணுவத்தில சேர சொல்லி கட்டாயப்படுத்துனாங்க. எங்க எல்லாரையும் ஒரு இடத்துக்கு வர வைச்சாங்க. அப்போதான் நான் முதல் முறையா யெகோவாவின் சாட்சிகளையே பார்த்தேன். நாங்க எல்லாரும் போர்ல கலந்துக்க மாட்டோம்னு அங்க இருந்த ராணுவ அதிகாரிங்ககிட்ட தீர்மானமா சொன்னோம். கோபத்தில ஒரு ராணுவ அதிகாரி, எங்களுக்கு கஷ்டமான வேலை கொடுக்கிறதாவும் பட்டினி போடுறதாவும் சொன்னார்; சுட்டு கொன்னுடுறதாகூட மிரட்டுனார். ஆனா, நாங்க பயப்படாம அவர்கிட்ட இப்படி சொன்னோம்: ‘நாங்க உங்க முன்னாடிதான் நிக்கிறோம், நீங்க எங்களை என்ன செஞ்சாலும் சரி, கடவுள் கொடுத்த கட்டளையை நாங்க மீற மாட்டோம், கொலை செய்ய மாட்டோம்.’”—யாத். 20:13.

“அதனால என்னையும் 2 சகோதரர்களையும் பெலாரூஸ் என்ற இடத்தில வயல் வேலை செய்யவும் சேதமாயிருந்த வீடுகளை சரி செய்யவும் அனுப்புனாங்க. போர்னால மின்ஸ்க் என்ற நகரத்தை சுத்தி இருந்த இடம் எப்படி இருந்ததுனு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு! ரோட்டில இருந்த மரம் எல்லாம் கருகி போயிருந்தது. பிணங்கள் எல்லாம் புதைக்காம அப்படியே கிடந்தது. காடுகள்லயும் குழிகள்லயும் செத்துப்போன குதிரைகளோட பிணங்கள் ஊதிபோய் இருந்தது. போர் சமயத்தில பயன்படுத்தப்பட்ட வண்டிங்க, பீரங்கிங்க அங்கங்க கிடந்தது; விமானத்தோட ஒடஞ்ச பாகம் எல்லாம் சிதறி கிடந்தது. கடவுளோட சட்டத்துக்கு கீழ்ப்படியாம போனா என்ன ஆகும்னு என் கண்ணால பார்த்தேன்.”

“1945-ல போர் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், போர்ல ஈடுபட மாட்டோம்னு சொன்னதுனால எங்களுக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்தாங்க. முதல் 3 வருஷம் எங்களால எந்த கூட்டங்கள்லயும் கலந்துக்க முடியல; எங்களுக்கு எந்த பிரசுரமும் கிடைக்கல. சில சகோதரிகளுக்கு நாங்க கடிதம் எழுதுனோம். ஆனா, அவங்களையும் கைது செஞ்சு 25 வருஷம் கட்டாய வேலை முகாமுக்கு அனுப்புனாங்க.”

“ஜெயிலுக்கு போன 5 வருஷத்துலேயே எங்களுக்கு விடுதலை கிடைச்சது. நான் ஜெயில்ல இருந்த சமயத்துல என் அம்மாவும் தங்கச்சியும் யெகோவாவின் சாட்சியா ஆனாங்க. என் அண்ணனுங்க 3 பேரும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிச்சிட்டு இருந்தாங்க. நான் சுறுசுறுப்பா பிரசங்கிக்க ஆரம்பிச்சதுனால போலீஸ் என்னை மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சாங்க. ஆனா அதுக்குள்ள, ஊழிய வேலையை கவனிச்சுக்கிட்ட சில சகோதரர்கள் என்னை ரகசியமா பிரசுரங்களை தயாரிக்க உதவி செய்ய சொன்னாங்க. அப்போ எனக்கு 24 வயசு.”

பிரசுரங்களை தயாரிக்க ஆரம்பிச்சேன்

“‘கடவுளோட அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலையை செய்ய யார் தடை செஞ்சாலும் அதை ரகசியமா செய்வோம்’னு யெகோவாவின் சாட்சிகள் எப்போதும் சொல்வாங்க. (நீதி. 28:28) பெரும்பாலும் பிரசுரங்களை அச்சடிக்கிற வேலையை ரகசியமா நிலத்துக்கு கீழ செஞ்சோம். நான் முதல் முதல்ல என் அண்ணன் டிமிட்ரியோட வீட்டுக்கு கீழ ஒரு சின்ன ரூம்ல ரகசியமா வேலை செஞ்சேன். சிலநேரம் நான் 2 வாரத்துக்கு அந்த ரூம்மைவிட்டு வெளியிலயே வர மாட்டேன். ஆக்ஸிஜன் இல்லாம மண்ணெண்ணெய் விளக்கு அணைஞ்சு போயிடும். அப்போ, அந்த ரூமுக்குள்ள காத்து வர்ற வரைக்கும் நான் அமைதியா படுத்திருப்பேன்.”

நிக்கொலாய் ரகசியமா நிலத்துக்கு கீழ பிரசுரங்களை தயாரிச்ச இடத்தின் படம்

“என்கூட வேலை செஞ்சிட்டு இருந்த சகோதரர், ‘நிக்கொலாய், நீங்க ஞானஸ்நானம் எடுத்திட்டீங்களா?’னு கேட்டார். யெகோவாவுக்கு 11 வருஷமா சேவை செஞ்சிருந்தாலும் அதுவரைக்கும் நான் ஞானஸ்நானம் எடுக்கல. அதை பத்தி அந்த சகோதரர் என்கிட்ட பேசுனார்; அந்த ராத்திரியே ஒரு ஏரில நான் ஞானஸ்நானம் எடுத்தேன். எனக்கு அப்போ 26 வயசு. 3 வருஷத்துக்கு அப்புறம், சோவியத் ரஷ்யா நாட்டோட ஆலோசனைக் குழுவுல (Country Committee) ஒருத்தரா இருக்கிற வாய்ப்பும் எனக்கு கிடைச்சது. ஜெயில்ல இருந்த சகோதரர்களோட வேலையை மத்த சகோதரர்கள் செஞ்சதுனால கடவுளோட அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலை தொடர்ந்து நடந்தது.”

ரகசியமா வேலை செஞ்சதுனால வந்த பிரச்சினைகள்

“நிலத்துக்கு கீழ ரகசியமா அச்சடிக்கிறது ஜெயில்ல இருக்கிறதவிட ரொம்ப கஷ்டம்! போலீஸ் கண்ணுல படாம இருக்க நான் 7 வருஷம் ரகசியமா வேலை செஞ்சேன். அதனால, கூட்டங்களுக்கே என்னால போக முடியல. யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை பாதுகாக்க நானே முயற்சி செய்ய வேண்டியிருந்தது. நான் எப்போவாவதுதான் என் குடும்பத்தில இருக்கிறவங்களை பார்க்க போவேன். அவங்க என் சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டது எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. நான் யார்கிட்டயும் மாட்டிக்காம ஜாக்கிறதையா வேலை செய்ய வேண்டியிருந்தது. இதை பத்தியே யோசிச்சிட்டு இருந்ததுனால என் சக்தி எல்லாம் அதுக்கே போயிடுச்சு. எல்லாத்துக்கும் நாங்க தயாரா இருக்க வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு, ஒருநாள் 2 போலீஸ் அதிகாரிங்க நான் இருந்த வீட்டுக்கு திடீர்னு வந்தாங்க. நான் உடனே ஜன்னல் வழியா எகிறி குதிச்சு ஒரு காட்டுக்குள்ள ஓடுனேன், அப்புறம் அங்க இருந்து ஒரு வயல்குள்ள ஓடுனேன். அப்போ எனக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்புறம்தான் அது துப்பாக்கியால சுடுற சத்தம்னு தெரிஞ்சிக்கிட்டேன். குதிரையில துரத்திக்கிட்டு வந்த ஒருத்தர், துப்பாக்கியில குண்டு தீர்ற வரைக்கும் என்னை சுட்டுக்கிட்டே வந்தார். அதுல ஒரு குண்டு என் கையில பட்டுச்சு. அவங்க என்னை 5 கிலோமீட்டர் (3 மைல்) துரத்திக்கிட்டே வந்தாங்க. அதுக்கு அப்புறம் ஒரு காட்டுக்குள் போய் ஒளிஞ்சிக்கிட்டேன். அதனால, நான் அன்னைக்கு உயிர் தப்புனேன்! கோர்ட்ல விசாரணை நடந்தப்போதான் அவங்க என்னை 32 தடவை சுட்டாங்கனு தெரிஞ்சிக்கிட்டேன்.”

“ரொம்ப நாள் நிலத்துக்கு கீழ வேலை செஞ்சதுனால நான் வெளுத்து போயிட்டேன். அதனால, நான் செஞ்சிட்டு இருந்த வேலை மத்தவங்களுக்கு தெரிஞ்சிடும்னு நான் நிறைய நேரம் வெயில்ல நின்னேன். என் உடல்நிலையும் மோசமாயிருந்தது. ஒருசமயம் என் மூக்குல இருந்தும் வாய்ல இருந்தும் ரத்தம் வந்ததுனால, சகோதரர்களோட நடந்த ஒரு முக்கியமான கூட்டத்தில என்னால கலந்துக்க முடியாம போயிடுச்சு.”

நிக்கொலாய் கைது செய்யப்பட்டார்

1963-ல, மார்டிவினியாவுல இருக்கிற கட்டாய வேலை முகாம்ல

“1957, ஜனவரி 26 அன்னைக்கு நான் கைது செய்யப்பட்டேன். 6 மாசத்துக்கு அப்புறம் உக்ரைன் நாட்டு உச்ச நீதிமன்றம் எனக்கு தீர்ப்பு கொடுத்தாங்க; என்னை சுட்டு கொல்லும்படி சொன்னாங்க. ஆனா, அந்த நாட்டுல மரண தண்டனை தடை செய்யப்பட்டு இருந்ததுனால எனக்கு 25 வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்தாங்க. என்னோட சேர்த்து இன்னும் 7 பேரை மார்டிவினியாவுல இருக்கிற கட்டாய வேலை முகாம்களுக்கு அனுப்புனாங்க. அங்க கிட்டத்தட்ட 500 யெகோவாவின் சாட்சிகள் இருந்தாங்க. நாங்க சின்ன சின்ன தொகுதியா சந்திச்சு காவற்கோபுர பத்திரிகையை ரகசியமா படிப்போம். ஒரு போலீஸ்காரர் எங்ககிட்ட இருந்த பத்திரிகைகளை பிடுங்கிக்கிட்டார். அதை எல்லாம் படிச்சு பார்த்ததுக்கு அப்புறம் அவர் இப்படி சொன்னார்: ‘இந்த பத்திரிகைகளை நீங்க தொடர்ந்து படிச்சா, உங்க விசுவாசத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது.’ ஜெயில்ல அவங்க எங்களுக்கு கொடுத்த வேலையை நாங்க நேர்மையா செஞ்சோம். அவங்க சொன்னதவிட அதிகமாவே செஞ்சோம். இருந்தாலும், அங்க இருந்த அதிகாரி எங்ககிட்ட இப்படி சொன்னார்: ‘நீங்க இங்க செய்ற வேலை எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்ல. நீங்க எங்களுக்கு விசுவாசமா இருக்கிறதுதான் எங்களுக்கு தேவை.’”

‘ஜெயில்ல எங்களுக்கு கொடுத்த வேலையை நேர்மையா செஞ்சோம். அவங்க சொன்னதவிட அதிகமாவே செஞ்சோம்’

அவரோட விசுவாசம் குறையவே இல்ல

வெலிகியே லுக்கில இருக்கிற ராஜ்யமன்றம்

1967-ல, என் தாத்தா விடுதலையானார். அதுக்கு அப்புறம் எஸ்டோனியாலயும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்லயும் புதுசா சபைகள் உருவாக உதவி செஞ்சார். 1957-ல யெகோவாவின் சாட்சிகள் மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததுனால அவங்க குற்றவாளி இல்லனு 1991-ன் ஆரம்பத்தில தீர்ப்பு சொன்னாங்க. கொடூரமா நடத்தப்பட்ட மற்ற யெகோவாவின் சாட்சிகள்மேல இருந்த குற்றமும் பொய்யுனு நிரூபிக்கப்பட்டது. என் தாத்தா 1996-ல செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ல இருந்து 500 கிலோமீட்டர் (300 மைல்) தூரத்தில இருக்கிற வெலிகியே லுக்கி என்ற இடத்துக்கு போனார். அங்க அவர் சின்னதா ஒரு வீடு வாங்குனார். பிறகு, 2003-ல அவர் வீட்டுக்கு பக்கத்துல இருந்த கொஞ்சம் இடத்தை ராஜ்யமன்றம் கட்டுறதுக்காக கொடுத்தார். நல்லா வளர்ந்து வர்ற 2 சபைகள் இன்னைக்கு அங்க இருக்கு.

நானும் என் கணவரும் ரஷ்யால இருக்கிற யெகோவாவின் சாட்சிகளோட கிளை அலுவலகத்தில சேவை செஞ்சிட்டு இருக்கோம். மார்ச் 2011-ல, சாகுறதுக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி என் தாத்தா எங்களை கடைசியா பார்க்க வந்தார். அப்போ அவருக்கு 85 வயசு. “இன்னைக்கு நடக்கிறத வைச்சு பார்க்குறப்போ, இஸ்ரவேலர்கள் எரிகோ பட்டணத்தை ஏழாவது நாள் சுத்துனது போன்ற ஒரு காலக்கட்டத்தில நாம வாழ்றோம்”னு அவர் சொன்னார். அவர் சொன்ன வார்த்தை எங்க மனசை ரொம்பவே தொட்டுச்சு. (யோசு. 6:15) அவர் வாழ்க்கையில நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிருக்கார். இருந்தாலும், “இளம் வயசுல இருந்தே யெகோவாவுக்கு சேவை செஞ்சதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். அதுக்காக ஒருநாளும் நான் வருத்தப்பட்டதே இல்ல!”னு அவர் சொன்னார்.