Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

ஒரு குற்றவாளியிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஒரு குற்றவாளியிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

இயேசு அந்தக் குற்றவாளியிடம் பேசிக்கொண்டிருப்பதைத்தான் நீ இந்தப் படத்தில் பார்க்கிறாய். அந்தக் குற்றவாளி, தான் செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறான். அவன் இயேசுவிடம், ‘நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும்’ என்கிறான். அதற்கு இயேசு பதில் சொல்வதைத்தான் படத்தில் பார்க்கிறாய். இயேசு அவனிடம் என்ன சொல்கிறார் என்று உனக்குத் தெரியுமா?— * ‘நீ என்னுடனேகூடப் பரதீஸில் [அதாவது, “பூஞ்சோலையில்,” NW] இருப்பாய்’ என்று வாக்குக் கொடுக்கிறார்.

அந்தப் பரதீஸ் எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியுமா?— இதற்குச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க, கடவுள் முதன்முதலில் உருவாக்கிய பரதீஸைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் மனித ஜோடியான ஆதாம் ஏவாளை கடவுள் அந்தப் பரதீஸில் வைத்தார். அது எங்கே இருந்தது? பரலோகத்திலா, பூமியிலா?—

பூமி என்பதுதான் சரியான பதில். அந்தக் குற்றவாளி பரதீஸில் இருப்பான் என்றால் இதே பூமி ‘பரதீஸாக’ மாறும்போது அவன் அதில் இருப்பான் என்று அர்த்தம். அந்தப் பரதீஸ் எப்படி இருக்கும்?— பதிலை இப்போது பார்க்கலாம்.

ஆதாம் ஏவாளைப் படைத்ததும் யெகோவா தேவன் அவர்களை ‘ஏதேன் தோட்டம்’ என்று அழைக்கப்பட்ட பரதீஸில் வைத்தார். அந்தத் தோட்டம் எவ்வளவு அழகாக இருந்திருக்குமென உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா?— இந்தப் பூமியில் அதுபோன்ற அழகான இடத்தை இதுவரை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள், அவ்வளவு அருமையாக இருந்தது!

நீ என்ன நினைக்கிறாய்? அந்தக் குற்றவாளியோடு சேர்ந்து இயேசுவும் இந்தப் பூமியில் இருப்பாரா? — இல்லை. இயேசு பரலோகத்தில் ராஜாவாக இருப்பார். அங்கிருந்து பரதீஸ் பூமியை ஆட்சி செய்வார். அப்படியானால், இயேசு அந்தக் குற்றவாளியோடு இருப்பார் என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அந்தக் குற்றவாளியை பரதீஸ் பூமியில் மீண்டும் உயிரோடு எழுப்பி, அவனுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார் என்று அர்த்தம். ஆனால், இயேசு ஏன் ஒரு குற்றவாளியை அந்தப் பரதீஸில் வாழ வைக்க வேண்டும்?— பதிலைப் பார்க்கலாம்.

அந்தக் குற்றவாளி கெட்ட காரியங்களைச் செய்திருந்தது உண்மைதான். இந்தப் பூமியில் வாழ்ந்த எத்தனையோ பேரும் அவனைப் போலவே கெட்ட காரியங்களைச் செய்திருக்கிறார்கள். யெகோவாவைப் பற்றியும் அவரைப் பிரியப்படுத்த என்ன செய்ய வேண்டுமென்பது பற்றியும் தெரியாததால் அப்படிச் செய்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் பரதீஸ் பூமியில் உயிரோடு எழுப்பப்படுவார்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும். அப்போது, யெகோவாமீது அன்பு இருப்பதை அவர்கள் வெளிக்காட்டலாம்.

எப்படி வெளிக்காட்டலாம் தெரியுமா?— யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் நடந்துகொள்வதன் மூலம் வெளிக்காட்டலாம். யெகோவாவையும் சக மனிதரையும் நேசிக்கிற மக்களோடு அந்த அழகிய பரதீஸில் என்றென்றும் வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கும்! ▪ (w13-E 06/01)

உன் பைபிளில் வாசித்துப்பார்

^ ஒரு பிள்ளையுடன் சேர்ந்து படித்தால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அந்தக் கேள்விக்குப் பிள்ளையைப் பதில் சொல்லச் சொல்லுங்கள்.