Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

ஆதி+ஆகமம்=ஆதியாகமம். அர்த்தம், “ஆரம்பகாலப் பதிவு.”

  • 1

    • வானமும் பூமியும் படைக்கப்படுகின்றன (1, 2)

    • பூமியிலுள்ள எல்லாமே ஆறு நாட்களில் படைக்கப்படுகின்றன (3-31)

      • 1-ஆம் நாள்: வெளிச்சம்; பகலும் இரவும் (3-5)

      • 2-ஆம் நாள்: ஆகாயவிரிவு (6-8)

      • 3-ஆம் நாள்: காய்ந்த தரையும், செடிகொடிகளும் (9-13)

      • 4-ஆம் நாள்: வானத்தில் ஒளிச்சுடர்கள் (14-19)

      • 5-ஆம் நாள்: மீன்களும், பறவைகளும் (20-23)

      • 6-ஆம் நாள்: நிலத்தில் வாழ்கிற மிருகங்களும், மனிதர்களும் (24-31)

  • 2

    • ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுக்கிறார் (1-3)

    • கடவுளாகிய யெகோவா வானத்தையும் பூமியையும் படைத்தவர் (4)

    • ஏதேன் தோட்டத்தில் மனிதனும் மனுஷியும் (5-25)

      • மனிதன் மண்ணிலிருந்து உருவாக்கப்படுகிறான் (7)

      • தடை செய்யப்பட்ட மரம் (15-17)

      • பெண் உருவாக்கப்படுகிறாள் (18-25)

  • 3

    • பாவத்தின் ஆரம்பம் (1-13)

      • முதல் பொய் (4, 5)

    • யெகோவாவின் பேச்சை மீறியவர்களுக்குத் தண்டனை (14-24)

      • பெண்ணின் சந்ததி பற்றி முன்னறிவிக்கப்படுகிறது (15)

      • ஏதேனிலிருந்து துரத்தப்படுகிறார்கள் (23, 24)

  • 4

    • காயீனும் ஆபேலும் (1-16)

    • காயீனின் வம்சம் (17-24)

    • சேத்தும் அவருடைய மகன் ஏனோசும் (25, 26)

  • 5

    • ஆதாம்முதல் நோவாவரை (1-32)

      • ஆதாமுக்கு மகன்களும் மகள்களும் பிறக்கிறார்கள் (4)

      • ஏனோக்கு கடவுளோடு நடந்தார் (21-24)

  • 6

    • தேவதூதர்கள் பூமியிலுள்ள பெண்களை மனைவிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள் (1-3)

    • ராட்சதர்கள் பிறக்கிறார்கள் (4)

    • மனிதர்களின் மோசமான நடத்தையைப் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார் (5-8)

    • பேழையைக் கட்டும்படி நோவாவிடம் சொல்கிறார் (9-16)

    • பெரிய வெள்ளம் வரப்போவதைப் பற்றிக் கடவுள் சொல்கிறார் (17-22)

  • 7

    • பேழைக்குள் போகுதல் (1-10)

    • பூமியெங்கும் வெள்ளம் (11-24)

  • 8

    • தண்ணீர் வடிகிறது (1-14)

      • புறா வெளியே விடப்படுகிறது (8-12)

    • பேழையிலிருந்து வெளியே வருதல் (15-19)

    • பூமியைப் பற்றிக் கடவுள் கொடுத்த வாக்குறுதி (20-22)

  • 9

    • எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிற அறிவுரைகள் (1-7)

      • இரத்தத்தைப் பற்றிய சட்டம் (4-6)

    • வானவில் ஒப்பந்தம் (8-17)

    • நோவாவின் வம்சத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் (18-29)

  • 10

    • சந்ததிகளின் பட்டியல் (1-32)

      • யாப்பேத்தின் வம்சம் (2-5)

      • காமின் வம்சம் (6-20)

        • நிம்ரோது யெகோவாவை எதிர்க்கிறான் (8-12)

      • சேமின் வம்சம் (21-31)

  • 11

    • பாபேல் கோபுரம் (1-4)

    • யெகோவா மொழியைக் குழப்புகிறார் (5-9)

    • சேமிலிருந்து ஆபிராம்வரை (10-32)

      • தேராகுவின் குடும்பம் (27)

      • ஊர் நகரத்தைவிட்டு ஆபிராம் புறப்படுகிறார் (31)

  • 12

    • ஆபிராம் ஆரானிலிருந்து கானானுக்குப் போகிறார் (1-9)

      • ஆபிராமுக்குக் கடவுள் கொடுக்கிற வாக்குறுதி (7)

    • எகிப்தில் ஆபிராமும் சாராயும் (10-20)

  • 13

    • ஆபிராம் கானானுக்குத் திரும்பிப் போகிறார் (1-4)

    • ஆபிராமும் லோத்துவும் பிரிந்து போகிறார்கள் (5-13)

    • ஆபிராமுக்கு மறுபடியும் கடவுளுடைய வாக்குறுதி (14-18)

  • 14

    • ஆபிராம் லோத்துவைக் காப்பாற்றுகிறார் (1-16)

    • ஆபிராமை மெல்கிசேதேக்கு ஆசீர்வதிக்கிறார் (17-24)

  • 15

    • ஆபிராமோடு கடவுள் செய்கிற ஒப்பந்தம் (1-21)

      • 400 வருட அடிமைத்தனம் முன்னறிவிக்கப்படுகிறது (13)

      • ஆபிராமுக்கு மறுபடியும் கடவுளுடைய வாக்குறுதி (18-21)

  • 16

    • ஆகாரும் இஸ்மவேலும் (1-16)

  • 17

    • ஆபிரகாம் நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆவார் (1-8)

      • ஆபிராமுக்கு ஆபிரகாம் என்று பெயர் வைக்கப்படுகிறது (5)

    • விருத்தசேதன ஒப்பந்தம் (9-14)

    • சாராய்க்கு சாராள் என்று பெயர் வைக்கப்படுகிறது (15-17)

    • ஈசாக்கு பிறப்பான் என்று வாக்குறுதி கொடுக்கப்படுகிறது (18-27)

  • 18

    • மூன்று தேவதூதர்கள் ஆபிரகாமைச் சந்திக்கிறார்கள் (1-8)

    • மகன் பிறப்பான் என்று சாராளுக்கு வாக்குறுதி; சாராள் சிரிக்கிறாள் (9-15)

    • சோதோமுக்காக ஆபிரகாம் கெஞ்சுகிறார் (16-33)

  • 19

    • தேவதூதர்கள் லோத்துவைச் சந்திக்கிறார்கள் (1-11)

    • குடும்பத்தோடு ஓடிப்போகும்படி லோத்துவிடம் சொல்லப்படுகிறது (12-22)

    • சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுகின்றன (23-29)

      • லோத்துவின் மனைவி உப்புச் சிலையாகிறாள் (26)

    • லோத்துவும் அவருடைய மகள்களும் (30-38)

      • மோவாபியர்கள் மற்றும் அம்மோனியர்களின் ஆரம்பம் (37, 38)

  • 20

    • அபிமெலேக்கிடமிருந்து சாராள் விடுவிக்கப்படுகிறாள் (1-18)

  • 21

    • ஈசாக்கு பிறக்கிறார் (1-7)

    • ஈசாக்கை இஸ்மவேல் கேலி செய்கிறான் (8, 9)

    • ஆகாரும் இஸ்மவேலும் வெளியே அனுப்பப்படுகிறார்கள் (10-21)

    • அபிமெலேக்குடன் ஆபிரகாம் செய்கிற ஒப்பந்தம் (22-34)

  • 22

    • ஈசாக்கைப் பலிகொடுக்கும்படி ஆபிரகாமிடம் சொல்லப்படுகிறது (1-19)

      • ஆபிரகாமின் சந்ததி மூலம் கிடைக்கும் ஆசீர்வாதம் (15-18)

    • ரெபெக்காளின் குடும்பம் (20-24)

  • 23

    • சாராளின் மரணமும் அவள் அடக்கம் செய்யப்படுகிற இடமும் (1-20)

  • 24

    • ஈசாக்குக்குப் பெண் தேடப்படுகிறது (1-58)

    • ரெபெக்காள் ஈசாக்கைச் சந்திக்கப் போகிறாள் (59-67)

  • 25

    • ஆபிரகாம் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்கிறார் (1-6)

    • ஆபிரகாமின் மரணம் (7-11)

    • இஸ்மவேலின் மகன்கள் (12-18)

    • யாக்கோபும் ஏசாவும் பிறக்கிறார்கள் (19-26)

    • மூத்த மகனின் உரிமையை ஏசா விற்கிறான் (27-34)

  • 26

    • கேராரில் ஈசாக்கும் ரெபெக்காளும் (1-11)

      • கடவுளுடைய வாக்குறுதி ஈசாக்கிடம் உறுதிப்படுத்தப்படுகிறது (3-5)

    • கிணறுகளுக்காக வாக்குவாதம் (12-25)

    • அபிமெலேக்குடன் ஈசாக்கு செய்கிற ஒப்பந்தம் (26-33)

    • ஏசாவின் இரண்டு ஏத்திய மனைவிகள் (34, 35)

  • 27

    • ஈசாக்கிடமிருந்து யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெறுகிறான் (1-29)

    • ஏசா ஆசீர்வாதம் கேட்கிறான், ஆனால் மனம் திருந்தவில்லை (30-40)

    • யாக்கோபின்மேல் ஏசாவுக்குக் கடும் கோபம் (41-46)

  • 28

    • யாக்கோபை ஈசாக்கு பதான்-அராமுக்கு அனுப்புகிறார் (1-9)

    • பெத்தேலில் யாக்கோபு கண்ட கனவு (10-22)

      • கடவுளுடைய வாக்குறுதி யாக்கோபுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது (13-15)

  • 29

    • யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறார் (1-14)

    • ராகேலை யாக்கோபு காதலிக்கிறார் (15-20)

    • லேயாளையும் ராகேலையும் யாக்கோபு கல்யாணம் செய்கிறார் (21-29)

    • லேயாளுக்கும் யாக்கோபுக்கும் பிறந்தவர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா (30-35)

  • 30

    • பில்காளுக்கு தாண், நப்தலி பிறக்கிறார்கள் (1-8)

    • சில்பாளுக்கு காத், ஆசேர் பிறக்கிறார்கள் (9-13)

    • லேயாளுக்கு இசக்கார், செபுலோன் பிறக்கிறார்கள் (14-21)

    • ராகேலுக்கு யோசேப்பு பிறக்கிறார் (22-24)

    • யாக்கோபின் மந்தைகள் பெருகுகின்றன (25-43)

  • 31

    • யாக்கோபு ரகசியமாக கானானுக்குக் கிளம்புகிறார் (1-18)

    • லாபான் யாக்கோபைத் துரத்திக்கொண்டு போகிறார் (19-35)

    • லாபானோடு யாக்கோபு செய்யும் ஒப்பந்தம் (36-55)

  • 32

    • தேவதூதர்கள் யாக்கோபைச் சந்திக்கிறார்கள் (1, 2)

    • ஏசாவைச் சந்திக்க யாக்கோபு தயாராகிறார் (3-23)

    • ஒரு தேவதூதரோடு யாக்கோபு போராடுகிறார் (24-32)

      • யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் வைக்கப்படுகிறது (28)

  • 33

    • ஏசாவை யாக்கோபு சந்திக்கிறார் (1-16)

    • யாக்கோபு சீகேமுக்குப் போகிறார் (17-20)

  • 34

    • தீனாள் கற்பழிக்கப்படுகிறாள் (1-12)

    • யாக்கோபின் மகன்கள் தந்திரமாக நடந்துகொள்கிறார்கள் (13-31)

  • 35

    • யாக்கோபு பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுகிறார் (1-4)

    • யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்பி வருகிறார் (5-15)

    • பென்யமீன் பிறக்கிறான், ராகேல் இறந்துபோகிறாள் (16-20)

    • இஸ்ரவேலின் 12 மகன்கள் (21-26)

    • ஈசாக்கின் மரணம் (27-29)

  • 36

    • ஏசாவின் வம்சம் (1-30)

    • ஏதோமின் ராஜாக்களும் குலத்தலைவர்களும் (31-43)

  • 37

    • யோசேப்பு கண்ட கனவுகள் (1-11)

    • யோசேப்பும் வயிற்றெரிச்சல்பட்ட அவனுடைய சகோதரர்களும் (12-24)

    • யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறான் (25-36)

  • 38

    • யூதாவும் தாமாரும் (1-30)

  • 39

    • போத்திபாரின் வீட்டில் யோசேப்பு (1-6)

    • யோசேப்பு போத்திபாருடைய மனைவியின் ஆசைக்கு அடிபணிய மறுக்கிறார் (7-20)

    • சிறையில் யோசேப்பு (21-23)

  • 40

    • கைதிகள் கண்ட கனவுகளின் அர்த்தத்தை யோசேப்பு சொல்கிறார் (1-19)

      • ‘கடவுளால் மட்டும்தான் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும்’ (8)

    • பார்வோனுடைய பிறந்த நாள் விருந்து (20-23)

  • 41

    • பார்வோன் கண்ட கனவுகளுக்கு யோசேப்பு அர்த்தம் சொல்கிறார் (1-36)

    • யோசேப்பைப் பார்வோன் உயர்த்துகிறார் (37-46அ)

    • யோசேப்பு உணவு நிர்வாகி ஆகிறார் (46ஆ-57)

  • 42

    • யோசேப்பின் அண்ணன்கள் எகிப்துக்குப் போகிறார்கள் (1-4)

    • யோசேப்பு அவருடைய அண்ணன்களைச் சந்திக்கிறார், அவர்களைச் சோதிக்கிறார் (5-25)

    • அவருடைய அண்ணன்கள் யாக்கோபிடம் திரும்பிப் போகிறார்கள் (26-38)

  • 43

    • யோசேப்பின் அண்ணன்கள் பென்யமீனோடு எகிப்துக்கு மறுபடியும் போகிறார்கள் (1-14)

    • யோசேப்பு தன் சகோதரர்களை மறுபடியும் சந்திக்கிறார் (15-23)

    • தன் சகோதரர்களோடு யோசேப்பு விருந்து சாப்பிடுகிறார் (24-34)

  • 44

    • பென்யமீனின் பையில் யோசேப்பின் வெள்ளிக் கோப்பை (1-17)

    • பென்யமீனுக்காக யூதா கெஞ்சுகிறார் (18-34)

  • 45

    • தான் யார் என்பதை யோசேப்பு சொல்கிறார் (1-15)

    • யோசேப்பின் சகோதரர்கள் யாக்கோபிடம் திரும்பிப் போகிறார்கள் (16-28)

  • 46

    • யாக்கோபு குடும்பத்தோடு எகிப்துக்குக் குடிமாறிப் போகிறார் (1-7)

    • எகிப்துக்குக் குடிமாறிப் போகிறவர்களின் பெயர்கள் (8-27)

    • கோசேனில் யோசேப்பு யாக்கோபைச் சந்திக்கிறார் (28-34)

  • 47

    • யாக்கோபு பார்வோனைச் சந்திக்கிறார் (1-12)

    • யோசேப்பு உணவு வழங்கும் பொறுப்பை ஞானமாகச் செய்கிறார் (13-26)

    • கோசேனில் இஸ்ரவேல் குடியேறுகிறார் (27-31)

  • 48

    • யோசேப்பின் இரண்டு மகன்களையும் யாக்கோபு ஆசீர்வதிக்கிறார் (1-12)

    • எப்பிராயீமுக்கு அதிக ஆசீர்வாதம் கிடைக்கிறது (13-22)

  • 49

    • மரணப் படுக்கையில் யாக்கோபு தீர்க்கதரிசனம் சொல்கிறார் (1-28)

      • யூதாவிலிருந்து ஷைலோ வருவார் (10)

    • தன்னை எங்கே அடக்கம் செய்ய வேண்டுமென்று யாக்கோபு சொல்கிறார் (29-32)

    • யாக்கோபின் மரணம் (33)

  • 50

    • யாக்கோபை யோசேப்பு கானானில் அடக்கம் செய்கிறார் (1-14)

    • சகோதரர்களை மன்னித்துவிட்டதாக யோசேப்பு உறுதியளிக்கிறார் (15-21)

    • யோசேப்பின் இறுதி நாட்களும் மரணமும் (22-26)

      • தன் எலும்புகளை என்ன செய்ய வேண்டுமென்று யோசேப்பு சொல்கிறார் (25)