Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சங்கீத புத்தகம்

அதிகாரங்கள்

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வித்தியாசமான இரண்டு பாதைகள்

      • கடவுளுடைய சட்டத்தைப் படிப்பதால் வரும் சந்தோஷம் (2)

      • நீதிமான்கள் கனி தருகிற மரம்போல் இருக்கிறார்கள் (3)

      • பொல்லாதவர்கள் பதரைப் போல் இருக்கிறார்கள் (4)

  • 2

    • யெகோவாவும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்

      • யெகோவா தேசங்களைப் பார்த்துச் சிரிக்கிறார் (4)

      • யெகோவா ஒரு ராஜாவை நியமிக்கிறார் (6)

      • மகனுக்கு மதிப்புக் கொடுங்கள் (12)

  • 3

    • ஆபத்துகளின் மத்தியிலும் கடவுள்மேல் நம்பிக்கை

      • ‘ஏன் இத்தனை எதிரிகள்?’ (1)

      • ‘யெகோவாதான் மீட்பு தருகிறவர்’ (8)

  • 4

    • நம்பிக்கையோடு செய்யப்படும் ஜெபம்

      • “கோபம் வந்தாலும் பாவம் செய்யாதீர்கள்” (4)

      • “நான் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவேன்” (8)

  • 5

    • யெகோவா நீதிமான்களுக்குத் தஞ்சம்

      • அக்கிரமத்தைக் கடவுள் வெறுக்கிறார் (4, 5)

      • “உங்களுடைய நீதியான பாதையில் என்னை வழிநடத்துங்கள்” (8)

  • 6

    • கருணைக்காகக் கெஞ்சுதல்

      • இறந்தவர்களால் கடவுளைப் புகழ முடியாது (5)

      • கருணைக்காகக் கெஞ்சும்போது கடவுள் கேட்கிறார் (9)

  • 7

    • யெகோவா நீதி தவறாத நீதிபதி

      • ‘யெகோவாவே, எனக்குத் தீர்ப்பு கொடுங்கள்’ (8)

  • 8

    • கடவுளுடைய மகிமையும் மனிதனுடைய மதிப்பும்

      • ‘உங்கள் பெயர் எவ்வளவு மகத்தானது!’ (1, 9)

      • ‘அற்ப மனுஷன் ஒரு பொருட்டா?’ (4)

      • ‘மனுஷனுக்கு மேன்மையைக் கிரீடமாகச் சூட்டினீர்கள்’ (5)

  • 9

    • கடவுளுடைய அற்புதமான செயல்களைப் பற்றி அறிவித்தல்

      • யெகோவா பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார் (9)

      • கடவுளுடைய பெயரைத் தெரிந்தவர்கள் அவர்மேல் நம்பிக்கை வைப்பார்கள் (10)

  • 10

    • ஆதரவற்றவர்களுக்கு யெகோவாவே துணை

      • பொல்லாதவன் ஆணவத்தோடு, “கடவுளே இல்லை” என்கிறான் (4)

      • ஆதரவற்றவன் யெகோவாவைத் தேடி வருகிறான் (14)

      • “யெகோவா என்றென்றும் ராஜாவாக இருக்கிறார்” (16)

  • 11

    • யெகோவாவிடம் தஞ்சம் புகுதல்

      • “யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்” (4)

      • வன்முறையை விரும்புகிறவனைக் கடவுள் வெறுக்கிறார் (5)

  • 12

    • யெகோவா நடவடிக்கை எடுக்கிறார்

      • கடவுளுடைய வார்த்தைகள் சுத்தமானவை (6)

  • 13

    • யெகோவா தரும் மீட்புக்காக ஏங்குதல்

      • “யெகோவாவே, எத்தனை நாளைக்குத்தான்?” (1, 2)

      • யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறார் (6)

  • 14

    • முட்டாள்களைப் பற்றிய விவரிப்பு

      • “யெகோவா என்று யாருமே கிடையாது” (1)

      • “நல்லது செய்கிறவர்கள் யாருமே இல்லை” (3)

  • 15

    • யெகோவாவின் கூடாரத்தில் யார் விருந்தாளியாக இருக்க முடியும்?

      • இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன் (2)

      • இல்லாததையும் பொல்லாததையும் பேசாதவன் (3)

      • கஷ்டமாக இருந்தாலும் வாக்கு மீறாதவன் (4)

  • 16

    • யெகோவா, நல்லதையெல்லாம் தருகிறவர்

      • “யெகோவாதான் என் பங்கு” (5)

      • ‘ராத்திரியில் என் யோசனைகள் என்னைத் திருத்துகின்றன’ (7)

      • ‘யெகோவா என் வலது பக்கத்தில் இருக்கிறார்’ (8)

      • “என்னைக் கல்லறையில் விட்டுவிட மாட்டீர்கள்” (10)

  • 17

    • பாதுகாப்புக்காக ஜெபம்

      • “என் இதயத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள்” (3)

      • “உங்களுடைய சிறகுகளின் நிழலில்” (8)

  • 18

    • மீட்புக்காகக் கடவுளைப் புகழ்தல்

      • “யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை” (2)

      • உண்மையுள்ளவர்களுக்கு யெகோவா உண்மையுள்ளவர் (25)

      • கடவுளுடைய வழிகள் குறை இல்லாதவை (30)

      • “உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்” (35)

  • 19

    • கடவுளுடைய படைப்பும் சட்டமும் சாட்சி சொல்கின்றன

      • “வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது” (1)

      • கடவுளுடைய குறையற்ற சட்டம் தெம்பூட்டுகிறது (7)

      • ‘நான் தெரியாமல் செய்த தவறுகள்’ (12)

  • 20

    • கடவுள் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு மீட்பு

      • “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம்” (7)

  • 21

    • யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கும் ராஜாவுக்கு ஆசீர்வாதங்கள்

      • ராஜாவுக்கு நீண்ட ஆயுள் (4)

      • கடவுளுடைய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் (8-12)

  • 22

    • முதலில் வேதனைப்படுகிறார், பின்பு புகழ்கிறார்

      • “என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?” (1)

      • “என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்” (18)

      • சபை நடுவில் கடவுளைப் புகழ்தல் (22, 25)

      • பூமியிலுள்ள எல்லாரும் கடவுளை வணங்குவார்கள் (27)

  • 23

    • ‘யெகோவா என் மேய்ப்பர்’

      • “எனக்கு ஒரு குறையும் வராது” (1)

      • “எனக்குப் புத்துணர்ச்சி தருகிறார்” (3)

      • “என் கிண்ணம் நிரம்பி வழிகிறது” (5)

  • 24

    • மகிமையுள்ள ராஜா நுழைவாசல்கள் வழியாக உள்ளே வருகிறார்

      • ‘பூமி யெகோவாவுக்குத்தான் சொந்தம்’ (1)

  • 25

    • வழிநடத்துதலுக்காகவும் மன்னிப்புக்காகவும் ஜெபம்

      • “உங்களுடைய வழிகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்” (4)

      • “யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்” (14)

      • “என் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுங்கள்” (18)

  • 26

    • உத்தமமாக நடப்பது

      • “யெகோவாவே, என்னை ஆராய்ந்து பாருங்கள்” (2)

      • கெட்ட சகவாசத்தைத் தவிர்த்தல் (4, 5)

      • ‘கடவுளுடைய பலிபீடத்தைச் சுற்றிவருவேன்’ (6)

  • 27

    • யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை

      • கடவுளுடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசிப்பது (4)

      • பெற்றோர் கைவிட்டாலும் யெகோவா கவனித்துக்கொள்வார் (10)

      • “யெகோவாமேல் நம்பிக்கையாக இரு” (14)

  • 28

    • சங்கீதக்காரனின் ஜெபம் கேட்கப்படுகிறது

      • “யெகோவா என் பலம், என் கேடயம்” (7)

  • 29

    • யெகோவாவின் மகா கம்பீரமான குரல்

      • பரிசுத்த உடையில் வணங்குங்கள் (2)

      • “மகிமையான கடவுள் இடிபோல் முழங்குகிறார்” (3)

      • யெகோவா தன்னுடைய மக்களுக்குப் பலம் தருகிறார் (11)

  • 30

    • துக்கம் சந்தோஷமாக மாறியது

      • கடவுளுடைய கருணை ஆயுள் முழுக்க நீடிக்கும் (5)

  • 31

    • யெகோவாவிடம் அடைக்கலம் புகுதல்

      • “என் உயிரை உங்களுடைய கையில் ஒப்படைக்கிறேன்” (5)

      • ‘யெகோவா, சத்தியத்தின் கடவுள்’ (5)

      • கடவுள் தரும் ஏராளமான நன்மைகள் (19)

  • 32

    • மன்னிக்கப்பட்டவர்கள் சந்தோஷமானவர்கள்

      • “என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்” (5)

      • கடவுள் விவேகத்தைத் தருகிறார் (8)

  • 33

    • படைப்பாளரைப் புகழ்தல்

      • “அவருக்காகப் புதிய பாடல் பாடுங்கள்” (3)

      • யெகோவாவின் வார்த்தையாலும் சுவாசத்தாலும் எல்லாமே உருவாக்கப்பட்டது (6)

      • யெகோவாவின் தேசம் சந்தோஷமானது (12)

      • யெகோவாவின் கண்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன (18)

  • 34

    • யெகோவா தன் ஊழியர்களை விடுவிக்கிறார்

      • “நாம் ஒன்றுசேர்ந்து அவருடைய பெயரை மெச்சிப் பேசலாம்” (3)

      • யெகோவாவின் தூதர் பாதுகாக்கிறார் (7)

      • “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” (8)

      • ‘அவருடைய எலும்புகளில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை’ (20)

  • 35

    • எதிரிகளிடமிருந்து விடுவிக்கப்படுவதற்காகச் செய்யப்படும் ஜெபம்

      • எதிரிகள் விரட்டியடிக்கப்படுவார்கள் (5)

      • மக்கள் கூட்டத்தின் நடுவில் கடவுளைப் புகழ்தல் (18)

      • காரணமில்லாமல் வெறுக்கப்படுதல் (19)

  • 36

    • கடவுளுடைய மாறாத அன்பு அருமையானது

      • பொல்லாதவனுக்குக் கடவுள்பயம் இல்லை (1)

      • கடவுள்தான் உயிரின் ஊற்று (9)

      • “உங்களுடைய ஒளியால் நாங்கள் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்” (9)

  • 37

    • யெகோவாமேல் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்பார்கள்

      • அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சலடையக் கூடாது (1)

      • “யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு” (4)

      • “உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு” (5)

      • “தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்” (11)

      • நீதிமானுக்கு உணவு இல்லாமல் போகாது (25)

      • நீதிமான்கள் பூமியில் என்றென்றும் வாழ்வார்கள் (29)

  • 38

    • மனம் திருந்திய ஒருவர் வேதனையோடு செய்யும் ஜெபம்

      • “வேதனையில் துடிக்கிறேன், மிகவும் நொந்துபோய் இருக்கிறேன்” (6)

      • தனக்காகக் காத்திருக்கிறவர்களுக்கு யெகோவா பதில் கொடுக்கிறார் (15)

      • “என் பாவம் என்னை வாட்டி வதைத்தது” (18)

  • 39

    • வாழ்க்கை குறுகியது

      • மனிதன் வெறும் மூச்சுக்காற்றுதான் (5, 11)

      • “என் கண்ணீரைப் பார்க்காமல் இருந்துவிடாதீர்கள்” (12)

  • 40

    • நிகரற்ற கடவுளுக்கு நன்றி சொல்லுதல்

      • கடவுளுடைய செயல்கள் கணக்கில் அடங்காதவை (5)

      • பலிகளை மட்டுமே கடவுள் முக்கியமானதாக நினைப்பதில்லை (6)

      • “உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்” (8)

  • 41

    • சுகமில்லாமல் படுத்துக் கிடக்கும்போது செய்யப்படும் ஜெபம்

      • சுகமில்லாமல் கிடக்கிறவனைக் கடவுள் தாங்குகிறார் (3)

      • நெருங்கிய நண்பனின் துரோகம் (9)

  • 42

    • மகத்தான மீட்பராகிய கடவுளைப் புகழ்தல்

      • ஒரு மான் தண்ணீருக்காக ஏங்குவது போல, கடவுளுக்காக ஏங்குதல் (1, 2)

      • “நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்?” (5, 11)

      • “கடவுளுக்காகக் காத்திரு” (5, 11)

  • 43

    • கடவுள் தீர்ப்பு கொடுத்து, காப்பாற்றுகிறார்

      • “உங்களுடைய ஒளியையும் சத்தியத்தையும் அனுப்புங்கள்” (3)

      • “நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்?” (5)

      • “கடவுளுக்காகக் காத்திரு” (5)

  • 44

    • உதவிக்காக ஜெபம்

      • “எங்களைக் காப்பாற்றியவர் நீங்கள்தான்” (7)

      • “வெட்டப்படுகிற ஆடுகள் போல” (22)

      • “எங்களுக்கு உதவி செய்ய எழுந்து வாருங்கள்!” (26)

  • 45

    • அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவின் கல்யாணம்

      • கனிவான பேச்சு (2)

      • “கடவுள்தான் என்றென்றும் உங்களுடைய சிம்மாசனம்” (6)

      • மணப்பெண்ணின் அழகில் ராஜா மயங்குகிறார் (11)

      • பூமியெங்கும் அதிபதிகளாக நியமிக்கப்படும் மகன்கள் (16)

  • 46

    • “கடவுள்தான் நம் அடைக்கலம்”

      • கடவுளின் பிரமிப்பான செயல்கள் (8)

      • பூமி முழுவதும் போர்களுக்குக் கடவுள் முடிவுகட்டுகிறார் (9)

  • 47

    • பூமி முழுவதுக்கும் கடவுள்தான் ராஜா

      • “யெகோவா பயபக்திக்குரியவர்” (2)

      • கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள் (6, 7)

  • 48

    • சீயோன், மகா ராஜாவின் நகரம்

      • உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது (2)

      • நகரத்தையும் அதன் கோட்டைகளையும் ஆராய்ந்து பாருங்கள் (11-13)

  • 49

    • சொத்துகளை நம்புவது முட்டாள்தனம்

      • எந்த மனிதனாலும் இன்னொருவனின் உயிரை மீட்கவே முடியாது (7, 8)

      • கல்லறையிலிருந்து கடவுள் விடுவிக்கிறார் (15)

      • சொத்துப்பத்துகள் எதுவும் சாவிலிருந்து காப்பாற்றாது (16, 17)

  • 50

    • உண்மையுள்ளவனுக்கும் பொல்லாதவனுக்கும் கடவுள் தீர்ப்பு கொடுக்கிறார்

      • பலியின் அடிப்படையில் கடவுளோடு செய்யப்படும் ஒப்பந்தம் (5)

      • “கடவுள்தான் நீதிபதி” (6)

      • எல்லா மிருகங்களும் கடவுளுடையவை (10, 11)

      • பொல்லாதவர்களின் செயல்களைக் கடவுள் வெட்டவெளிச்சமாக்குகிறார் (16-21)

  • 51

    • மனம் திருந்தியவரின் ஜெபம்

      • தாயின் வயிற்றில் உருவானபோதே பாவிதான் (5)

      • “என் பாவத்தை நீக்குங்கள்” (7)

      • “சுத்தமான இதயத்தை எனக்குள் உருவாக்குங்கள்” (10)

      • நொறுங்கிய நெஞ்சம் கடவுளுக்குப் பிரியமானது (17)

  • 52

    • கடவுளுடைய மாறாத அன்பை நம்புதல்

      • கெட்டதைப் பற்றிப் பெருமையடிப்பவர்களுக்கு எச்சரிக்கை (1-5)

      • கடவுளை நம்பாதவர்கள் சொத்துப்பத்துகளை நம்புகிறார்கள் (7)

  • 53

    • முட்டாள்களைப் பற்றிய விவரிப்பு

      • “யெகோவா என்று யாருமே கிடையாது” (1)

      • “நல்லது செய்கிறவர்கள் யாருமே இல்லை” (3)

  • 54

    • எதிரிகள் சூழ்ந்திருக்கும்போது உதவிக்காகச் செய்யும் ஜெபம்

      • “கடவுள் எனக்குத் துணையாக இருக்கிறார்” (4)

  • 55

    • நண்பன் துரோகம் பண்ணியபோது செய்த ஜெபம்

      • நெருங்கிய நண்பனால் நோகடிக்கப்படுதல் (12-14)

      • “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு” (22)

  • 56

    • துன்புறுத்தப்படும்போது செய்யும் ஜெபம்

      • “கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” (4)

      • ‘என் கண்ணீர்த் துளிகள் உங்கள் தோல் பையில்’ (8)

      • “அற்ப மனுஷனால் என்னை என்ன செய்ய முடியும்?” (4, 11)

  • 57

    • கருணை காட்ட வேண்டுதல்

      • கடவுளுடைய சிறகுகளின் கீழ் தஞ்சம் (1)

      • எதிரிகள் தோண்டிய குழியில் அவர்களே விழுகிறார்கள் (6)

  • 58

    • பூமியை நியாயந்தீர்க்கிற கடவுள் ஒருவர் இருக்கிறார்

      • பொல்லாதவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று செய்யப்படும் ஜெபம் (6-8)

  • 59

    • கடவுள் கேடயமும் அடைக்கலமுமாக இருக்கிறார்

      • ‘துரோகம் செய்கிறவர்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள்’ (5)

      • “நான் உங்களுடைய பலத்தைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்” (16)

  • 60

    • கடவுள் எதிரிகளை அடக்கிவிடுகிறார்

      • மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் (11)

      • “கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்” (12)

  • 61

    • கடவுள், எதிரியிடமிருந்து பாதுகாக்கிற பலமான கோட்டை

      • “நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்” (4)

  • 62

    • உண்மையான மீட்பு கடவுளிடமிருந்து வருகிறது

      • “கடவுளுக்காக அமைதியாய்க் காத்திருக்கிறேன்” (1, 5)

      • ‘உங்கள் இதயத்தில் இருப்பதைக் கடவுள்முன் ஊற்றிவிடுங்கள்’ (8)

      • மனிதர்கள் எல்லாரும் வெறும் மூச்சுக்காற்றுதான் (9)

      • செல்வத்தின் மேல் நம்பிக்கை வைக்காதீர்கள் (10)

  • 63

    • கடவுளுக்காக ஏங்குதல்

      • “உங்களுடைய மாறாத அன்பு உயிரைவிட மேலானது” (3)

      • ‘அருமையான விருந்தைச் சாப்பிட்டது போன்ற திருப்தி’ (5)

      • ராத்திரியில் கடவுளைப் பற்றித் தியானித்தல் (6)

      • ‘கடவுளை இறுக்கமாகப் பிடித்திருக்கிறேன்’ (8)

  • 64

    • மறைவான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு

      • “கடவுள் அவர்கள்மேல் அம்பு எறிவார்” (7)

  • 65

    • பூமியைக் கடவுள் அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்

      • ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ (2)

      • ‘உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் சந்தோஷமானவர்’ (4)

      • கடவுள் ஏராளமான நன்மைகளைப் பொழிகிறார் (11)

  • 66

    • கடவுளுடைய பிரமிப்பான செயல்கள்

      • “கடவுளுடைய செயல்களை வந்து பாருங்கள்” (5)

      • “என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்” (13)

      • கடவுள் ஜெபத்தைக் கேட்கிறார் (18-20)

  • 67

    • பூமியெங்கும் உள்ளவர்கள் கடவுளுக்குப் பயப்படுவார்கள்

      • கடவுளுடைய வழியைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்வார்கள் (2)

      • ‘கடவுளே, எல்லா மக்களும் உங்களைப் புகழட்டும்’ (3, 5)

      • “கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்” (6, 7)

  • 68

    • ‘கடவுளுடைய எதிரிகள் சிதறிப்போகட்டும்’

      • “அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு அப்பா” (5)

      • தன்னந்தனியாக இருக்கிறவர்களுக்குக் கடவுள் வீடு தருகிறார் (6)

      • நல்ல செய்தியை அறிவிக்கிற பெண்கள் (11)

      • மனிதர்களைப் பரிசுகளாக (18)

      • ‘யெகோவா ஒவ்வொரு நாளும் நம் பாரத்தைச் சுமக்கிறார்’ (19)

  • 69

    • காப்பாற்றப்படுவதற்காகச் செய்யப்படும் ஜெபம்

      • “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிகிறது” (9)

      • “எனக்குச் சீக்கிரமாகப் பதில் சொல்லுங்கள்” (17)

      • “என் தாகத்துக்குக் காடியைத் தந்தார்கள்” (21)

  • 70

    • உடனடியாக உதவும்படி ஜெபம் செய்யப்படுகிறது

      • “சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்” (5)

  • 71

    • வயதானவர்களின் நம்பிக்கை

      • சிறுவயதிலிருந்தே கடவுள்மேல் நம்பிக்கை (5)

      • “என் உடல் தளர்ந்துபோகும்போது” (9)

      • ‘சிறுவயதிலிருந்து கடவுள் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்’ (17)

  • 72

    • கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவின் சமாதானமான ஆட்சி

      • “நீதிமான்கள் செழிப்பார்கள்” (7)

      • ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும் குடிமக்கள் இருப்பார்கள் (8)

      • வன்முறையிலிருந்து விடுதலை (14)

      • பூமியில் ஏராளமான தானியம் (16)

      • கடவுளுடைய பெயர் என்றென்றும் புகழப்படும் (19)

  • 73

    • கடவுள்பக்தி உள்ள ஒருவர் மீண்டும் ஆன்மீகக் கண்ணோட்டத்தைப் பெறுகிறார்

      • “நான்தான் கிட்டத்தட்ட வழிதவறிப் போய்விட்டேன்” (2)

      • “நாள் முழுவதும் நான் வேதனைப்பட்டேன்” (14)

      • “கடைசியில், கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்கு வந்தேன்” (17)

      • பொல்லாதவர்கள் சறுக்கலான தரையில் நிற்கிறார்கள் (18)

      • கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் நல்லது (28)

  • 74

    • மக்களை நினைத்துப் பார்க்கும்படி கடவுளிடம் செய்யப்படும் ஜெபம்

      • கடவுள் தந்த மீட்பைப் பற்றி நினைத்துப் பார்க்கப்படுகிறது (12-17)

      • ‘எதிரி பழித்துப் பேசியதை நினைத்துப் பாருங்கள்’ (18)

  • 75

    • கடவுள் நீதியோடு நியாயந்தீர்க்கிறார்

      • பொல்லாதவர்கள் யெகோவாவின் கிண்ணத்திலிருந்து குடிப்பார்கள் (8)

  • 76

    • சீயோனின் எதிரிகளைக் கடவுள் தோற்கடிக்கிறார்

      • தாழ்மையான மக்களைக் கடவுள் காப்பாற்றுகிறார் (9)

      • கர்வம்பிடித்த எதிரிகள் அடக்கப்படுவார்கள் (12)

  • 77

    • இக்கட்டான காலத்தில் செய்யப்படும் ஜெபம்

      • கடவுளுடைய செயல்களைத் தியானித்துப் பார்த்தல் (11, 12)

      • ‘கடவுளே, உங்களைப் போல மகத்தானவர் யார்?’ (13)

  • 78

    • அக்கறையுள்ள கடவுளும், விசுவாசமில்லாத இஸ்ரவேலர்களும்

      • வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லுங்கள் (2-8)

      • “கடவுள்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை” (22)

      • ‘வானத்தின் தானியம்’ (24)

      • “இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளைத் துக்கப்படுத்தினார்கள்” (41)

      • எகிப்திலிருந்து வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம்வரை (43-55)

      • “கடவுளுக்கு எதிராகச் சவால் விட்டுக்கொண்டே இருந்தார்கள்” (56)

  • 79

    • தேசங்கள் கடவுளுடைய மக்கள்மேல் படையெடுத்து வந்தபோது செய்யப்பட்ட ஜெபம்

      • “பழிப்பேச்சுக்கு நாங்கள் ஆளாகிவிட்டோம்” (4)

      • ‘உங்கள் பெயரை மனதில் வைத்து எங்களுக்கு உதவுங்கள்’ (9)

      • “சுற்றுவட்டார மக்களுக்கு ஏழு மடங்கு தண்டனை கொடுங்கள்” (12)

  • 80

    • திரும்பவும் கருணை காட்டும்படி இஸ்ரவேலின் மேய்ப்பரிடம் கெஞ்சுதல்

      • “கடவுளே, திரும்பவும் எங்களுக்குக் கருணை காட்டுங்கள்” (3)

      • இஸ்ரவேல் கடவுளுடைய திராட்சைக் கொடி (8-15)

  • 81

    • கீழ்ப்படியும்படி ஓர் அறிவுரை

      • வேறு தெய்வங்களை வணங்கக் கூடாது (9)

      • “என் பேச்சைக் கேட்டால்” (13)

  • 82

    • நீதியான தீர்ப்பு கொடுக்கும்படி கேட்கப்படுகிறது

      • “கடவுள்களின்” நடுவே கடவுள் தீர்ப்பு கொடுக்கிறார் (1)

      • ‘எளியவர்களுக்கு நீதி செய்யுங்கள்’ (3)

      • “நீங்கள் எல்லாரும் கடவுள்கள்” (6)

  • 83

    • எதிரிகள் தாக்க வரும்போது செய்யப்படும் ஜெபம்

      • “கடவுளே, மவுனமாக இருக்காதீர்கள்” (1)

      • எதிரிகள், காற்றில் சுழற்றியடிக்கப்படும் முட்செடிபோல் இருக்கிறார்கள் (13)

      • கடவுளுடைய பெயர் யெகோவா (18)

  • 84

    • கடவுளுடைய மகத்தான கூடாரத்துக்காக ஏங்குதல்

      • பறவைபோல் இருக்க ஏங்கும் லேவியன் (3)

      • “உங்கள் பிரகாரங்களில் ஒரேவொரு நாள்” (10)

      • ‘கடவுள் ஒரு சூரியன், ஒரு கேடயம்’ (11)

  • 85

    • திரும்பவும் கருணை காட்டும்படி செய்யப்படும் ஜெபம்

      • உண்மையாக நடக்கிறவர்களுக்குக் கடவுள் சமாதான வார்த்தைகளைச் சொல்வார் (8)

      • மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் ஒன்றையொன்று சந்திக்கும் (10)

  • 86

    • யெகோவாவைப் போல வேறு கடவுள் இல்லை

      • யெகோவா மன்னிக்கத் தயாராக இருக்கிறார் (5)

      • எல்லா தேசங்களும் யெகோவாவை வணங்கும் (9)

      • “உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்” (11)

      • “என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்” (11)

  • 87

    • சீயோன், உண்மைக் கடவுளின் நகரம்

      • சீயோனில் பிறந்தவர்கள் (4-6)

  • 88

    • மரணத்திலிருந்து காப்பாற்றும்படி செய்யப்படும் ஜெபம்

      • “என் உயிர் கல்லறையின் விளிம்புக்கே வந்துவிட்டது” (3)

      • ‘ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களிடம் ஜெபம் செய்கிறேன்’ (13)

  • 89

    • யெகோவாவின் மாறாத அன்பைப் பற்றிப் பாடுதல்

      • தாவீதோடு செய்த ஒப்பந்தம் (3)

      • தாவீதின் சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும் (4)

      • கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர் கடவுளை “தகப்பன்” என்று சொல்கிறார் (26)

      • தாவீதோடு செய்த ஒப்பந்தம் மீறப்படாது (34-37)

      • மனிதன் கல்லறையின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது (48)

  • 90

    • என்றென்றும் வாழ்கிற கடவுளும், கொஞ்சக் காலம் வாழ்கிற மனிதனும்

      • ஆயிரம் வருஷங்கள் நேற்றைய தினம்போல் இருக்கின்றன (4)

      • மனிதன் 70-80 வருஷங்கள் வாழ்கிறான் (10)

      • “எங்கள் வாழ்நாட்களை நன்றாகப் பயன்படுத்துவதற்கு கற்றுக்கொடுங்கள்” (12)

  • 91

    • கடவுளுடைய மறைவிடத்தில் பாதுகாப்பு

      • வேடனிடமிருந்து பாதுகாக்கப்படுதல் (3)

      • கடவுளுடைய இறக்கைகளின் கீழ் அடைக்கலம் (4)

      • ஆயிரம் பேர் விழுந்தாலும் உனக்கு ஒன்றும் ஆகாது (7)

      • காக்கும்படி தூதர்களுக்குக் கட்டளை (11)

  • 92

    • யெகோவா என்றென்றும் உயர்ந்தவர்

      • அவருடைய அற்புதமான செயல்களும் ஆழமான யோசனைகளும் (5)

      • ‘நீதிமான்கள் மரம்போல் செழித்து வளருவார்கள்’ (12)

      • வயதானவர்கள் திடமாகவே இருப்பார்கள் (14)

  • 93

    • யெகோவாவின் மகத்தான ஆட்சி

      • “யெகோவா ராஜாவாகிவிட்டார்!” (1)

      • ‘உங்கள் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை’ (5)

  • 94

    • பழிவாங்கும்படி கடவுளிடம் செய்யப்படும் ஜெபம்

      • ‘இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் இருப்பார்கள்?’ (3)

      • கடவுள் திருத்தும்போது சந்தோஷம் கிடைக்கிறது (12)

      • கடவுள் தன்னுடைய மக்களைக் கைவிட மாட்டார் (14)

      • “சட்டத்தின் பெயரில் பிரச்சினை உண்டாக்குகிறார்கள்” (20)

  • 95

    • உண்மைக் கடவுளை வணங்குகிறவர்கள் கீழ்ப்படிய வேண்டும்

      • “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால்” (7)

      • “உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்” (8)

      • “அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்” (11)

  • 96

    • “யெகோவாவுக்காகப் புதிய பாடல் பாடுங்கள்”

      • யெகோவா, எல்லா புகழையும் பெறத் தகுதியானவர் (4)

      • மக்கள் வணங்கும் தெய்வங்கள் ஒன்றுக்கும் உதவாதவை (5)

      • பரிசுத்த உடையில் வணங்குங்கள் (9)

  • 97

    • யெகோவா மற்ற தெய்வங்களைவிட மிக மிக உயர்ந்தவர்

      • “யெகோவா ராஜாவாகிவிட்டார்!” (1)

      • யெகோவாவை நேசியுங்கள், கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள் (10)

      • நீதிமான்களுக்கு ஒளி (11)

  • 98

    • யெகோவாவே மீட்பர், நீதி தவறாத நீதிபதி

      • யெகோவா தரும் மீட்பு தெரியப்படுத்தப்படுகிறது (2, 3)

  • 99

    • யெகோவா, பரிசுத்தமான ராஜா

      • கேருபீன்களுக்கு மேலாக வீற்றிருக்கிறார் (1)

      • கடவுள் மன்னிக்கிறவர், தண்டிக்கிறவர் (8)

  • 100

    • படைப்பாளருக்கு நன்றி சொல்லுதல்

      • “சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்” (2)

      • ‘கடவுள்தான் நம்மைப் படைத்தார்’ (3)

  • 101

    • உத்தமமாக நடந்துகொள்ளும் ஆட்சியாளர்

      • ‘ஆணவம் பிடித்தவர்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ (5)

      • ‘உண்மையாக நடக்கிறவர்களைக் கருணையோடு பார்ப்பேன்’ (6)

  • 102

    • அடக்கி ஒடுக்கப்படுகிறவர் வேதனையில் செய்யும் ஜெபம்

      • “தனியாக உட்கார்ந்திருக்கிற பறவை போல இருக்கிறேன்” (7)

      • “என் நாட்கள் மறைந்துபோகிற நிழல் போல இருக்கின்றன” (11)

      • “சீயோனை யெகோவா திரும்பக் கட்டுவார்” (16)

      • யெகோவா என்றென்றும் நிலைத்திருக்கிறார் (26, 27)

  • 103

    • “என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்”

      • நம்முடைய குற்றங்களைக் கடவுள் தூரமாகத் தூக்கியெறிகிறார் (12)

      • அப்பாபோல் கடவுள் இரக்கம் காட்டுகிறார் (13)

      • நாம் மண் என்பதைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (14)

      • யெகோவாவுடைய சிம்மாசனமும் ஆட்சியும் (19)

      • கடவுளுடைய வார்த்தையைத் தூதர்கள் நிறைவேற்றுகிறார்கள் (20)

  • 104

    • அதிசயமான படைப்புகளுக்காகக் கடவுளைப் புகழ்தல்

      • பூமி ஒருபோதும் அழியாது (5)

      • மனிதனுக்குத் திராட்சமதுவும் உணவும் (15)

      • “உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை!” (24)

      • ‘உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போகின்றன’ (29)

  • 105

    • யெகோவா தன் மக்களிடம் உண்மையோடு நடந்துகொள்கிறார்

      • யெகோவா தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறார் (8-10)

      • “நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல் கை வைக்காதீர்கள்” (15)

      • அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பைக் கடவுள் பயன்படுத்துகிறார் (17-22)

      • எகிப்தில் கடவுள் அற்புதங்களைச் செய்கிறார் (23-36)

      • எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் புறப்படுகிறார்கள் (37-39)

      • ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (42)

  • 106

    • இஸ்ரவேலர்கள் நன்றி காட்டவில்லை

      • கடவுள் செய்தவற்றைச் சீக்கிரத்தில் மறந்துவிட்டார்கள் (13)

      • கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் காளையின் உருவத்துக்குக் கொடுத்தார்கள் (19, 20)

      • கடவுளுடைய வாக்குறுதியில் அவர்கள் துளிகூட விசுவாசம் வைக்கவில்லை (24)

      • பாகாலை வணங்க ஆரம்பித்தார்கள் (28)

      • பிள்ளைகளைப் பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள் (37)

  • 107

    • கடவுளுடைய அற்புதமான செயல்களுக்காக நன்றி சொல்லுங்கள்

      • அவர்களைச் சரியான வழியில் அவர் நடத்தினார் (7)

      • தாகத்தையும் பசியையும் தீர்த்தார் (9)

      • இருட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார் (14)

      • தன் வார்த்தையை அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார் (20)

      • அடக்கி ஒடுக்கப்படும் ஏழைகளைப் பாதுகாக்கிறார் (41)

  • 108

    • எதிரிகளைத் தோற்கடிக்க உதவும்படி செய்யப்படும் ஜெபம்

      • மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் (12)

      • “கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்” (13)

  • 109

    • வேதனையில் இருக்கிறவரின் ஜெபம்

      • ‘அவனுடைய பொறுப்பை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்’ (8)

      • கடவுள் ஏழையின் பக்கத்தில் நிற்கிறார் (31)

  • 110

    • மெல்கிசேதேக்கைப் போலவே ராஜாவும் குருவுமாக இருக்கிறவர்

      • “உன் எதிரிகளின் நடுவே ஆட்சி செய்” (2)

      • மனப்பூர்வமாகத் தங்களை அர்ப்பணிக்கும் வாலிபர்கள் பனித்துளி போன்றவர்கள் (3)

  • 111

    • யெகோவாவின் மகத்தான செயல்களுக்காக அவரைப் புகழுங்கள்

      • கடவுளுடைய பெயர் பரிசுத்தமானது, பயபக்திக்குரியது (9)

      • யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம் (10)

  • 112

    • நீதிமான் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்

      • தாராளமாகக் கொடுக்கிறவன் செழிப்பான் (5)

      • “நீதிமான் என்றென்றும் நினைவில் வைக்கப்படுவான்” (6)

      • தாராள குணமுள்ளவன் ஏழைகளுக்குக் கொடுக்கிறான் (9)

  • 113

    • உயர்ந்த இடத்தில் இருக்கிற கடவுள் எளியவனைத் தூக்கிவிடுகிறார்

      • யெகோவாவின் பெயர் என்றும் புகழப்படும் (2)

      • கடவுள் குனிந்து பார்க்கிறார் (6)

  • 114

    • இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்

      • கடல் விலகி ஓடியது (5)

      • மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப் போலத் துள்ளின (6)

      • நாணற்புல் நிறைந்த குளமாகப் பாறை மாற்றப்பட்டது (8)

  • 115

    • கடவுளை மட்டுமே மகிமைப்படுத்த வேண்டும்

      • உயிரில்லாத சிலைகள் (4-8)

      • பூமி மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (16)

      • “இறந்தவர்கள் ‘யா’வைப் புகழ்வதில்லை” (17)

  • 116

    • நன்றிப் பாடல்

      • ‘நான் யெகோவாவுக்கு என்ன கைமாறு செய்வேன்?’ (12)

      • “மீட்பு என்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்வேன்” (13)

      • ‘யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதையெல்லாம் நிறைவேற்றுவேன்’ (14, 18)

      • உண்மையாக இருப்பவர்களின் மரணம் பெரிய இழப்பு (15)

  • 117

    • யெகோவாவைப் புகழ மற்ற தேசத்தார் அழைக்கப்படுகிறார்கள்

      • கடவுள் காட்டுகிற மாறாத அன்பு மகத்தானது (2)

  • 118

    • யெகோவா தந்த வெற்றிக்கு நன்றி சொல்லுதல்

      • ‘நான் “யா”வை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் என் குரலைக் கேட்டார்’ (5)

      • “யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார்” (6, 7)

      • ஒதுக்கித்தள்ளப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாகும் (22)

      • “யெகோவாவின் பெயரில் வருகிறவர்” (26)

  • 119

    • கடவுளுடைய மதிப்புமிக்க வார்த்தைக்கு நன்றியோடு இருத்தல்

      • “இளைஞர்கள் எப்படிச் சுத்தமான வாழ்க்கை வாழ முடியும்?” (9)

      • “உங்கள் நினைப்பூட்டுதல்களை நான் மிகவும் விரும்புகிறேன்” (24)

      • “உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” (74, 81, 114)

      • “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!” (97)

      • “எல்லா போதகர்களையும்விட விவேகமாக” (99)

      • ‘உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்கு’ (105)

      • “சத்தியம்தான் உங்களுடைய வார்த்தையின் சாராம்சம்” (160)

      • கடவுளுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குச் சமாதானம் (165)

  • 120

    • ஓர் அன்னியர் சமாதானத்துக்காக ஏங்குகிறார்

      • ‘ஏமாற்றுகிற நாவு என் உயிரைப் பறித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ (2)

      • “நான் சமாதானத்தையே விரும்புகிறேன்” (7)

  • 121

    • யெகோவா தன் மக்களைக் காக்கிறார்

      • “யெகோவாவிடமிருந்தே எனக்கு உதவி வரும்” (2)

      • யெகோவா தூங்குவதே இல்லை (3, 4)

  • 122

    • எருசலேமின் சமாதானத்துக்கான ஜெபம்

      • யெகோவாவின் ஆலயத்துக்குப் போவதில் சந்தோஷம் (1)

      • ஒன்றிணைக்கப்பட்ட நகரம் (3)

  • 123

    • யெகோவாவின் கருணைக்காக எதிர்பார்த்துக் காத்திருத்தல்

      • ‘வேலைக்காரர்களைப் போல யெகோவாவுக்காக எதிர்பார்த்திருக்கிறோம்’ (2)

      • “நாங்கள் உச்சக்கட்ட அவமரியாதைக்கு ஆளாகிவிட்டோம்” (3)

  • 124

    • “யெகோவா மட்டும் நம்மோடு இல்லையென்றால்”

      • உடைக்கப்பட்ட கண்ணியிலிருந்து தப்பித்தல் (7)

      • “யெகோவாவின் பெயரே நமக்குத் துணை” (8)

  • 125

    • யெகோவா தன் மக்களைப் பாதுகாக்கிறார்

      • “எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல” (2)

      • “இஸ்ரவேலுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்” (5)

  • 126

    • மக்கள் சீயோனுக்கு மறுபடியும் வந்தபோது கிடைத்த சந்தோஷம்

      • ‘யெகோவா அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்’ (3)

      • அழுகை ஆனந்தமாக மாறுகிறது (5, 6)

  • 127

    • கடவுள் இல்லையென்றால் எல்லாமே வீண்

      • “யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால்” (1)

      • பிள்ளைகள் கடவுள் தரும் சொத்து (3)

  • 128

    • யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் சந்தோஷம்

      • மனைவி கனிதருகிற திராட்சைக் கொடி போன்றவள் (3)

      • ‘எருசலேம் செழித்தோங்குவதை நீ பார்ப்பாயாக!’ (5)

  • 129

    • தாக்கப்பட்டாலும் தோற்கடிக்கப்படுவதில்லை

      • சீயோனை வெறுக்கிறவர்களுக்குத் தலைகுனிவு (5)

  • 130

    • “ஆழத்திலிருந்து உங்களைக் கூப்பிடுகிறேன்”

      • “நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால்” (3)

      • யெகோவா மனதார மன்னிக்கிறார் (4)

      • ‘நான் ஆவலோடு யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்’ (6)

  • 131

    • பால்மறந்த குழந்தைபோல் திருப்தியாக இருத்தல்

      • பெரிய காரியங்களுக்காக ஆசைப்படாமல் இருத்தல் (1)

  • 132

    • தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீதும் சீயோனும்

      • “நீங்கள் தேர்ந்தெடுத்தவரை ஒதுக்கிவிடாதீர்கள்” (10)

      • சீயோனின் குருமார்களுக்கு மீட்பின் உடை (16)

  • 133

    • ஒற்றுமையாகக் கூடி வாழ்வது

      • ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட எண்ணெய்போல் (2)

      • எர்மோனின் பனிபோல் (3)

  • 134

    • ராத்திரி நேரங்களில் கடவுளைப் புகழ்தல்

      • ‘பரிசுத்தத்தோடு உங்கள் கைகளை உயர்த்துங்கள்’ (2)

  • 135

    • யெகோவா மகத்தானவர் என்பதால் அவரைப் புகழுங்கள்

      • எகிப்துக்கு எதிரான அடையாளங்களும் அற்புதங்களும் (8, 9)

      • “உங்களுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிறது” (13)

      • உயிரில்லாத சிலைகள் (15-18)

  • 136

    • யெகோவா என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்

      • வானத்தையும் நிலப்பரப்பையும் கைத்திறமையால் படைத்திருக்கிறார் (5, 6)

      • பார்வோன் செங்கடலில் செத்தான் (15)

      • துவண்டுபோனவர்களைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (23)

      • எல்லா உயிர்களுக்கும் உணவு (25)

  • 137

    • பாபிலோனின் ஆறுகளுக்குப் பக்கத்தில்

      • சீயோனைப் பற்றிப் பாடவில்லை (3, 4)

      • பாபிலோன் அழிக்கப்படும் (8)

  • 138

    • கடவுள் உயர்ந்தவர், ஆனாலும் அக்கறை காட்டுகிறவர்

      • ‘நீங்கள் பதில் கொடுத்தீர்கள்’ (3)

      • ‘ஆபத்தின் மத்தியிலும் என்னைக் காப்பாற்றுகிறீர்கள்’ (7)

  • 139

    • கடவுளுக்குத் தன் ஊழியர்களை நன்றாகத் தெரியும்

      • கடவுளுடைய சக்தியிடமிருந்து தப்பிக்க முடியாது (7)

      • “என்னை அற்புதமாகப் படைத்திருக்கிறீர்கள்!” (14)

      • ‘நான் கருவாக இருந்தபோதே என்னைப் பார்த்தீர்கள்’ (16)

      • “முடிவில்லாத பாதையில் என்னை வழிநடத்துங்கள்” (24)

  • 140

    • யெகோவா, பலம்படைத்த மீட்பர்

      • அக்கிரமக்காரர்கள் பாம்புகளைப் போல இருக்கிறார்கள் (3)

      • வன்முறைக்காரர்கள் அழிவார்கள் (11)

  • 141

    • பாதுகாப்பு கேட்டு செய்யப்படும் ஜெபம்

      • ‘என் ஜெபம் தூபப்பொருள்போல் இருக்கட்டும்’ (2)

      • நீதிமானின் கண்டிப்பு எண்ணெய்போல் இருக்கிறது (5)

      • பொல்லாதவர்கள் தங்கள் வலைகளிலேயே விழுகிறார்கள் (10)

  • 142

    • துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்து காப்பாற்றும்படி செய்யப்படும் ஜெபம்

      • “நான் அடைக்கலம் தேடி ஓடுவதற்கு இடமே இல்லை” (4)

      • “உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” (5)

  • 143

    • வறண்ட நிலம் மழைக்காக ஏங்குவதுபோல் கடவுளுக்காக ஏங்குதல்

      • ‘நீங்கள் செய்தவற்றைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன்’ (5)

      • “உங்களுடைய விருப்பப்படி நடக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள்” (10)

      • ‘உங்களுடைய அருமையான சக்தி என்னை வழிநடத்தட்டும்’ (10)

  • 144

    • வெற்றிக்காகச் செய்யப்படும் ஜெபம்

      • ‘அற்ப மனுஷன் யார்?’ (3)

      • “எதிரிகளைச் சிதறிப்போகச் செய்யுங்கள்” (6)

      • யெகோவாவின் மக்கள் சந்தோஷமானவர்கள் (15)

  • 145

    • மகா ராஜாவான கடவுளைப் புகழ்தல்

      • ‘கடவுளுடைய மகத்துவத்தைப் பற்றி அறிவிப்பேன்’ (6)

      • “யெகோவா எல்லாருக்கும் நல்லது செய்கிறார்” (9)

      • “உங்களுக்கு உண்மையாக இருக்கிறவர்கள் உங்களைப் புகழ்வார்கள்” (10)

      • கடவுளுடைய ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும் (13)

      • கடவுளுடைய கை எல்லாரையும் திருப்திப்படுத்துகிறது (16)

  • 146

    • மனிதர்களை அல்ல, கடவுளை நம்புங்கள்

      • சாகும்போது மனிதனுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன (4)

      • துவண்டுபோனவர்களைக் கடவுள் தூக்கி நிறுத்துகிறார் (8)

  • 147

    • கடவுளுடைய அன்பான, வல்லமையான செயல்களைப் புகழ்தல்

      • உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார் (3)

      • நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார் (4)

      • வெள்ளைக் கம்பளத்தால் மூடுவதுபோல் பனியால் மூடுகிறார் (16)

  • 148

    • எல்லா படைப்புகளும் யெகோவாவைப் புகழட்டும்

      • ‘தேவதூதர்களே, அவரைப் புகழுங்கள்’ (2)

      • ‘சூரியனே, சந்திரனே, நட்சத்திரங்களே அவரைப் புகழுங்கள்’ (3)

      • பெரியவர்களும் சிறியவர்களும் கடவுளைப் புகழட்டும் (12, 13)

  • 149

    • கடவுளின் வெற்றியைப் புகழும் பாடல்

      • யெகோவா தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார் (4)

      • கடவுளுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு பெருமை (9)

  • 150

    • சுவாசமுள்ள எல்லா உயிர்களும் ‘யா’வைப் புகழட்டும்

      • ‘யா’வைப் புகழுங்கள்! (1, 6)