Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதையல் தேடுவோம்!

புதையல் தேடுவோம்!

டவுன்லோட்:

  1. 1. நாளும் பைபிள் வாசிக்கையில்,

    புதையல் கிடைக்குமே!

    ஆழமாகத் தோண்டினாலே

    கிடைக்கும் சந்தோஷமே!

    கற்பனை வானில் நான் பறந்து போவேனே!

    காட்சியோடு ஒன்றாய் நான் சேர்ந்துகொள்வேனே!

    (பல்லவி)

    கற்பனை செய்வேன், யோசித்துப் பார்ப்பேன்.

    அர்த்தம் புரிந்துகொள்வேனே!

    நல்ல வழியில் நடந்திடவே

    உதவி செய்யும் பைபிள்தான்!

    பைபிள் உதவுமே!

  2. 2.‏ நல்ல ஆட்கள், கெட்ட ஆட்கள்

    பற்றி பைபிள் சொல்லுதே!

    யெகோவாவின் மனதையே

    தெளிவாகக் காட்டுதே!

    ஆழமாக யோசித்து பார்த்திடுவேனே!

    யெகோவாவின் நண்பனாய் ஆயிடுவேனே!

    (பல்லவி)

    கற்பனை செய்வோம், யோசித்துப் பார்ப்போம்.

    அர்த்தம் புரிந்துகொள்வோமே!

    நல்ல வழியில் நடந்திடவே,

    உதவி செய்யும் பைபிள்தான்!

    பைபிள் உதவுமே!

    (பல்லவி)

    கற்பனை செய்வோம், யோசித்துப் பார்ப்போம்!

    கற்பனை செய்வோம், யோசித்துப் பார்ப்போம்!

    கற்பனை செய்வோம், யோசித்துப் பார்ப்போம்!