Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் இவ்வளவு துன்பம்?

ஏன் இவ்வளவு துன்பம்?

இந்தக் கேள்விக்குத் தங்களுக்குப் பதில் தெரியும் என்று பாதிரிமார்கள் சிலர் சொல்கிறார்கள். துன்பங்கள் எல்லாம் நாம் செய்யும் தவறுகளுக்குக் கடவுள் கொடுக்கும் தண்டனை என்பதே பெரும்பாலும் அவர்கள் சொல்லும் பதில். உதாரணத்திற்கு, ஹெய்டியில் பூமியதிர்ச்சி ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அதன் தலைநகரத்தில் வசித்த ஒரு பாதிரியார் தனது சர்ச் அங்கத்தினர்களிடம், இந்தப் பேரழிவின் மூலமாகக் கடவுள் நமக்கு ஒரு செய்தி சொல்ல வருவதாகச் சொன்னார். வேறு சிலர் இவரைப் போல் அடித்துச் சொல்வதில்லை. மதத்தைப் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் ஒருவர் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொன்னார்: “கடவுள் ஏன் இப்படிப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்துகிறார் என்பதெல்லாம் மர்மமான விஷயம். அதைப் பற்றி நாம் கேள்வி கேட்கக் கூடாது. கண்ணை மூடிக்கொண்டு கடவுளை விசுவாசிக்க வேண்டும், அவ்வளவுதான்.”

அப்படியென்றால், கடவுளா நமக்குத் துன்பத்தைக் “கொடுக்கிறார்”? இல்லவே இல்லை—இதுதான் பைபிளின் ஆணித்தரமான பதில். யெகோவா தேவன் மனிதர்களைப் படைத்தபோது துன்பத்தின் நிழல்கூட அவர்கள்மீது படக்கூடாது என்றே நினைத்தார். ஆனால், முதல் மனித ஜோடி கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். எது நல்லது எது கெட்டது என்று சொந்தமாகத் தீர்மானம் செய்ய விரும்பினார்கள். இதனால் கடவுளைவிட்டு விலகிச் சென்று கஷ்டப்பட்டார்கள். அதன் பின்விளைவுகளை அவர்களுடைய சந்ததியான நாமும் அனுபவிக்கிறோம். ஆக, துன்பத்திற்கெல்லாம் கடவுள் ஒருபோதும் காரணம் அல்ல. “சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது. தீய காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையுமே சோதிப்பது கிடையாது” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:13) துன்பம் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம், ஏன் கடவுளுடைய ஊழியர்களைக்கூட பாதிக்கலாம். பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்:

  • கடவுளுடைய தீர்க்கதரிசியான எலிசா தீராத வியாதியால் அவதிப்பட்டார்.—2 இராஜாக்கள் 13:14.

  • அப்போஸ்தலனாகிய பவுல் பைபிளில் இப்படி எழுதினார்: “நாங்கள் தொடர்ந்து பசியோடு இருக்கிறோம், தாகத்தோடு இருக்கிறோம், போதிய உடையின்றி இருக்கிறோம்; முரட்டுத்தனமாக நடத்தப்படுகிறோம், வீடுவாசலின்றி தவிக்கிறோம்.”—1 கொரிந்தியர் 4:11.

  • கிறிஸ்தவரான எப்பாப்பிரோதீத்து நோய்வாய்ப்பட்டு, ‘சோகமாயிருந்தார்.’—பிலிப்பியர் 2:25, 26.

இந்த மூன்று மனிதர்களும் தாங்கள் செய்த பாவத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதாக பைபிளில் எங்கேயும் சொல்லப்படவில்லை. துன்பத்திற்குக் கடவுள் காரணம் இல்லை என்றே பைபிள் சொல்கிறது. அதோடு, துன்பத்திற்கு மூன்று அடிப்படை காரணங்களையும் அது அடையாளம் காட்டுகிறது. (g11-E 07)

சொந்தத் தீர்மானம்

“ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.” (கலாத்தியர் 6:7) ஆகவே, ஒருவர் புகைப்பிடித்தால், கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டினால், கன்னாபின்னாவென செலவு செய்தால் அதனால் வரும் கஷ்டங்களுக்கு அவரே பொறுப்பு.

அதோடு, மற்றவர்கள் எடுக்கிற சுயநலமான தீர்மானங்களும்கூட நமக்குத் துன்பத்தைக் கொண்டு வரலாம். உதாரணமாக, சில மனிதர்களின் மிருகத்தனமான நடத்தை மற்றவர்களைப் பாதித்திருக்கிறது. அதற்கு ஹிட்லரின் ஆட்சியில் நாசிக்கள் செய்த அட்டூழியங்கள், குழந்தைத் துஷ்பிரயோகம் என நிறைய அத்தாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆம், ஒருவர் எடுக்கிற தவறான தீர்மானங்கள் அவருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் கடும் வேதனையைக் கொண்டு வந்திருக்கிறது.

எதிர்பாரா சம்பவங்கள்

கி.பி. முதல் நூற்றாண்டில் எருசலேமில் இருந்த ஒரு பெரிய கோபுரம் இடிந்து விழுந்தபோது 18 பேர் இறந்து போனார்கள். “கொல்லப்பட்ட பதினெட்டுப் பேர், எருசலேமில் குடியிருக்கும் மற்ற எல்லாரையும்விடப் பெரும் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை” என்று இயேசு சொன்னார். (லூக்கா 13:4, 5) இந்தச் சம்பவத்தில் பலியானவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்ல என்பது இயேசுவுக்குத் தெரியும். “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன” என்று கடவுளுடைய வார்த்தை ஏற்கெனவே சொல்லியிருந்ததும் அவருக்குத் தெரியும். (பிரசங்கி 9:11NW) ஒருவர் தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருப்பதால் அநேக விபத்துகள் ஏற்படுகின்றன. அதோடு, மனித தவறினாலும் ஏற்படுகின்றன. உதாரணமாக, மனிதர்கள் எச்சரிக்கைகளை அசட்டை செய்வதால் நிறைய விபத்துக்கள் ஏற்படுகின்றன; அதோடு, விதிமுறைகளை மீறி கட்டடங்களைக் கட்டும்போது பூமியதிர்ச்சிக்கும் கடுமையான சீதோஷ்ணத்திற்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை இடிந்துவிடுவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. மனிதர்கள் இப்படிச் செய்யும்போது எதிர்பாராத சம்பவங்களினால் வரும் பாதிப்புகள் அதிகமாகின்றன, இன்னும் அதிக மக்கள் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

“இந்த உலகத்தை ஆளுகிறவன்”

“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 12:31; 1 யோவான் 5:19) அந்தப் ‘பொல்லாதவன்தான்’ பிசாசாகிய சாத்தான். இவன் வலிமைமிக்க ஒரு தூதன். இவனைக் குறித்து பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘காற்றுபோல் நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகச் சிந்தையை, அதாவது கீழ்ப்படியாதவர்களிடம் தற்போது செயல்படுகிற சிந்தையை ஆளுகிறவன்.’ இதன் அர்த்தம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அநேக மக்களுடைய சிந்தனையை அவன் கட்டுப்படுத்துகிறான், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக அவர்களைத் தூண்டுகிறான். (எபேசியர் 2:2) அதனால்தான், இனப் படுகொலை, குழந்தைத் துஷ்பிரயோகம் போன்ற மிகப் பயங்கரமான குற்றச்செயல்களைப் பார்க்கும்போது அநேகர், ‘சாதாரண மனிதன் இப்படிச் செய்ய மாட்டான், இதற்குப் பின்னால் தீய சக்தி இருக்க வேண்டும்’ என்று நினைக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கடவுள் பார்க்கிறாரா, மனிதர்கள்மீது அவருக்கு அக்கறை இருக்கிறதா? இவற்றை முடிவுக்குக் கொண்டுவர அவரால் ஏதாவது செய்ய முடியுமா, செய்வாரா?